Home> Technology
Advertisement

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி! 5G-க்கு காத்திருக்க வேண்டியதில்லை

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. பிஎஸ்என்எல்லின் 4ஜி சேவைகள் இரண்டு வாரங்களில் நாட்டில் தொடங்கும்.   

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி! 5G-க்கு காத்திருக்க வேண்டியதில்லை

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி மற்றும் 5ஜி சேவைகளை கொடுக்கும் வகையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுத்துக் கொண்டிருக்கும் அந்த நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என தெரிவித்திருக்கிறது. தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, பின் தங்கியிருந்தாலும் அந்த நெட்வொர்க்கை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருக்கிறது. பிஎஸ்என்எல் முதலில் 200 தளங்களுடன் 4ஜி நெட்வொர்க்கைத் தொடங்குகிறது.

மேலும் படிக்க | விரைவில் வெளியாகும் OnePlus 12 ஸ்மார்ட்போன்! இத்தனை சிறப்பம்சங்களா?

மூன்று மாத சோதனைக்குப் பிறகு, பிஎஸ்என்எல் அதன் 4ஜி சேவைகளை ஒரு நாளைக்கு சராசரியாக 200 தளங்களில் தொடங்கும். இந்தத் தகவலை மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியுடன் கங்கோத்ரியில் 5ஜி சேவையை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைஷ்ணவ் இவ்வாறு கூறினார். மேலும், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்கை 5ஜிக்கு மேம்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

“நாங்கள் இந்தியாவில் 4ஜி-5ஜி டெலிகாம் ஸ்டேக்கை உருவாக்கியுள்ளோம். இது சண்டிகர் மற்றும் டெஹ்ராடூன் இடையே 200 தளங்களில் பயன்படுத்தப்பட்டு, அடுத்த அதிகபட்சம் இரண்டு வாரங்களுக்குள் செயல்படத் தொடங்கும் என்றும் கூறியுள்ளார். நாடு முழுவதும் 1.23 லட்சத்துக்கும் அதிகமான தளங்களில் 4ஜி நெட்வொர்க்கை வழங்குவதற்காக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ஐடிஐ லிமிடெட் நிறுவனங்களுக்கு ரூ.19,000 கோடி ஒப்பந்தத்தை பிஎஸ்என்எல் வழங்கியுள்ளது. பிஎஸ்என்எல்லின் 4ஜி நெட்வொர்க்கிற்கு, நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சம் தளங்களில் நிறுவுதல் மற்றும் பராமரிப்பு பணிகளை டிசிஎஸ் கவனிக்கும். 

பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க் பயன்படுத்தப்படும் வேகம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்று வைஷ்ணவ் கூறினார். பிஎஸ்என்எல் நெட்வொர்க் ஆரம்பத்தில் 4ஜி போன்று செயல்படும். நவம்பர்-டிசம்பர் மாதங்களில், இது மிகச் சிறிய மென்பொருள் மாற்றங்களுடன் 5G ஆக மாறும். பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை அக்டோபர் 1, 2022 அன்று தொடங்கி வைத்தார். அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஐந்து மாதங்களில், நாட்டில் ஒரு லட்சம் தளங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டன. டிசம்பர் 31, 2023க்குள் சுமார் 1.5 லட்சம் தளங்களில் 5ஜி சேவையை வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றும் இதுவரை 2 லட்சம் தளங்களில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அஷ்வனி வைஷ்ணவ் கூறினார். டிசம்பர் 31ம் தேதிக்குள் 3 லட்சம் இடங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | அதிர்ச்சி! அமேசானில் அதிரடியாக உயர்ந்த பொருட்களின் விலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More