Home> Technology
Advertisement

BSNL வழங்கும் மிக மலிவான ஒரு வருட பிளான்... தினம் 3ஜிபி அதிக வேக டேட்டா

BSNL நிறுவனம் தனது மலிவான மற்றும் நல்ல ரீசார்ஜ் திட்டங்களால் வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகிறது. இந்த திட்டங்கள் மற்ற தனியார் நிறுவனங்களை விட அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியவை. 

BSNL வழங்கும் மிக மலிவான ஒரு வருட பிளான்...  தினம் 3ஜிபி அதிக வேக டேட்டா

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடக்கூடிய திட்டங்களை பிஎஸ்என்எல் வழங்கியுள்ளது.  BSNL நிறுவனம் தனது மலிவான மற்றும் நல்ல ரீசார்ஜ் திட்டங்களால் வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகிறது. இந்த திட்டங்கள் மற்ற தனியார் நிறுவனங்களை விட அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியவை. 

BSNL தனது 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்தும் அதே நேரத்தில், மலிவான திட்டங்களை வழங்குகி வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது. சமீபத்தில்,  ஒரு வருட காலத்திற்கான சிறப்பான ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் மாதாமாதம் ரீசார்ஜ் செய்யும் பிரச்சனை இருக்காது.

பிஎஸ்என்எல் ரூ.2,999 ரீசார்ஜ் திட்டம்

BSNL இன் ரூ.2,999 ரீசார்ஜ் திட்டம், 395 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. உங்கள் மொபைலை ஆண்டு முழுவதும் தடையின்றி பயன்படுத்த இந்த திட்டம் மிகச் சிறந்தது. தினமும் 3ஜிபி அதிவேக இணையத்தைப் பெறுவீர்கள். ஒரு நாளைக்கு 3 ஜிபிக்கு மேல் இருந்தால், உங்கள் இணைய வேகம் குறையும். இந்த திட்டத்தில் நீங்கள் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் பெறுவீர்கள். 

மேலும் படிக்க | இவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது: இதை செக் செய்துகொள்ளுங்கள்

அதிக தரவு தேவை உள்ள பயனர்களுக்கு ஏற்ற ரீசார்ஜ் திட்டம்

 பிஎஸ்என்எல் திட்டம் தினமும் அதிக இணைய டேட்டா தேவைப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது. இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு நாளும் 3 ஜிபி வேகமான இணையத்தைப் பெறுவீர்கள். இதன் மூலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இணையத்தை பயன்படுத்தலாம்.

BSNL நிறுவனம் பல வகையான திட்டங்களை வழங்குகிறது. BSNL இணையதளத்திற்குச் சென்று உங்களுக்கு  ஏற்ற திட்டம் எது என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.   நீங்கள் ஒரு வருடத்திற்கான நல்ல மற்றும் மலிவான திட்டத்தை விரும்பினால், BSNL இன் ரூ.2,999 திட்டம் மிகவும் நல்லது. இதில் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

பிஎஸ்என்எல் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, தனது 4G சேவைகளை நாட்டில் வேகமாக விரிவுபடுத்துகிறது. சமீபத்தில், BSNL தனது சொந்தமாக உள்ள 15,000+ 4ஜி நெட்வொர்க் டவர்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் வழங்கும் வேறு சில மலிவான திட்டங்கள்

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.298 Plan Details)

ரீசார்ஜ் பிளான் செல்லுபடியாகும் காலம்: 52 நாட்கள் 
அதிவேக டேட்டா: 1 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்
கூடுதல் பலன்கள்: Eros Now பொழுதுபோக்கு சேவைகளுக்கான இலவச சந்தா

பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs.399 Plan Details)

ரீசார்ஜ் பிளான் செல்லுபடியாகும் காலம்: 70 நாட்கள் 
அதிவேக டேட்டா: 1 ஜிபி/நாள்
தொலைபேசி அழைப்பு: அன்லிமிடெட் காலிங்
SMS: 100 SMS/நாள்

மேலும் படிக்க | செல்ல நாய்க்குட்டியின் மொழியை புரிய வைக்கும் ஏஐ சாஃப்ட்வேர்! நாய் குரைப்பதும் மொழியே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More