Home> Technology
Advertisement

ஜில்லுனு ஒரு சலுகை: ரூ. 5,290-க்கு டபிள் டோர் கோத்ரெஜ் ஃப்ரிட்ஜ், பிளிப்கார்டில் கூல் ஆஃபர்

Flipkart Super Cooling Days விற்பனை நடந்து வருகிறது. நீங்கள் புதிய குளிர்சாதனப்பெட்டியை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்றுதான் சரியான நேரம். கோத்ரெஜின் டபிள் டோர் குளிர்சாதன பெட்டியை மிக மலிவாக வாங்கலாம். 

ஜில்லுனு ஒரு சலுகை: ரூ. 5,290-க்கு டபிள் டோர் கோத்ரெஜ் ஃப்ரிட்ஜ், பிளிப்கார்டில் கூல் ஆஃபர்

ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில், பிளிப்கார்ட் சூப்பர் கூலிங் டேய்ஸ் ( Flipkart Super Cooling Days) விற்பனை நடந்து வருகிறது. இந்த விற்பனை ஏப்ரல் 25ஆம் தேதி வரை நடைபெறும். 

இந்த சூப்பர்கூல் விற்பனையில், குளிர்சாதன பெட்டிகள், ஸ்பிளிட் மற்றும் விண்டோ ஏசிகள் ஆகியவற்றுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. நீங்கள் ஒரு புதிய குளிர்சாதன பெட்டியை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த விற்பனை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

பிளிப்கார்டின் இந்த விற்பனையில் கோத்ரெஜ் 236 எல் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ டபிள் டோர் குளிர்சாதன பெட்டியை மிக மலிவாக வாங்கலாம். சுமார் 22 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த ஃப்ரிட்ஜை சுமார் 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க முடியும். இவ்வளவு மலிவாக இந்த ஃப்ரிட்ஜை எப்படி வாங்குவது என இந்த பதிவில் காணலாம். 

பிளிப்கார்ட் சூப்பர் கூலிங் டேய்ஸ்: கோத்ரெஜ் 236 எல் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ டபிள் டோர் ஃப்ரிட்ஜ் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

கோத்ரெஜ் 236 எல் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ டபுள் டோர் ரெஃப்ரிஜிரேட்டரின் தொடக்க விலை ரூ.21,900 ஆகும். எனினும், ஃபிளிப்கார்ட் விற்பனையில் இந்த குளிர்சாதனப் பெட்டி ரூ.19,790க்கு கிடைக்கிறது. அதாவது, 9% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு இதில் பல சலுகைகளும் உள்ளன. இவற்றின் காரணமாக குளிர்சாதன பெட்டியின் விலை மேலும் குறையும்.

மேலும் படிக்க | கேமிங் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் Oppo K10 Review 

பிளிப்கார்ட் சூப்பர் கூலிங் டேய்ஸ்: கோத்ரெஜ் 236 எல் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ டபிள் டோர் ஃப்ரிட்ஜ் வங்கி சலுகை
கோத்ரெஜ் 236 எல் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ டபிள் டோர் ஃப்ரிட்ஜ்-ஐ வாங்க, எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், உடனடியாக ரூ.1,750 தள்ளுபடி கிடைக்கும். இதுதவிர ரூ.750 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. வங்கிச் சலுகையைப் பெற்ற பிறகு, குளிர்சாதனப் பெட்டியின் விலை ரூ.17,290 ஆக குறைந்துவிடும்.

பிளிப்கார்ட் சூப்பர் கூலிங் டேய்ஸ்: கோத்ரெஜ் 236 எல் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ டபிள் டோர் ஃப்ரிட்ஜ் பரிமாற்ற சலுகை

கோத்ரெஜ் 236 எல் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ டபிள் டோர் ஃப்ரிட்ஜ்ஜில் ரூ.12,000 எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் அதாவது பரிமாற்ற சலுகை உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஃப்ரிட்ஜை மாற்றிக்கொண்டால், இந்த தள்ளுபடியை பெறலாம். எனினும், பரிமாற்ற சலுகையை பயன்படுத்திக்கொள்ள வாடிக்கையாளர்களின் பழைய ஃப்ரிட்ஜ் நல்ல நிலையில் இருப்பதும், சமீபத்திய மாடலாக இருப்பதும் அவசியமாகும். இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,000 தள்ளுபடி கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அனைத்து தள்ளுபடிகளையும் முழுமையாக பெற முடிந்தால், வெறும் ரூ. 5,290-க்கு இந்த ஃப்ரிட்ஜை வாங்கலாம். 

மேலும் படிக்க | பிளிப்கார்ட் சலுகை; 50 இன்ச் ஸ்மார்ட் டிவியில் 25 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More