Home> Technology
Advertisement

Disney+ Hotstar பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! ஏப்ரல் முதல் இந்த வசதி கிடைக்காது

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மார்ச் 31 முதல் சந்தாதாரர்களுக்கு இந்த ஆப் HBO உள்ளடக்கத்தை வழங்கப் போவதில்லை. இதனை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Disney+ Hotstar பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி! ஏப்ரல் முதல் இந்த வசதி கிடைக்காது

டிஸ்னி + ஹாட்ஸ்டார் இந்தியாவில் மிகவும் பிரபலமான OTT இயங்குதளமாகும். ஐபிஎல், நேரடி கிரிக்கெட், வெப் தொடர்கள் மற்றும் சமீபத்திய திரைப்படங்கள் போன்றவற்றை காரணமாக இந்த ஓடிடி தளம் எப்போதும் டிரெண்டில் உள்ளது. அந்தவகையில் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தியை வழங்கியுள்ளது. அதன்படி மார்ச் 31 முதல் சந்தாதாரர்களுக்கு இந்த ஆப் HBO உள்ளடக்கத்தை வழங்கப் போவதில்லை. இதனை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பேர் அதிர்ச்சியில் தந்துள்ளது. 

HBO உள்ளடக்கம் Disney + Hotstar இல் தோன்றாது
இந்த நிலையில் இனி Disney Plus Hotstar பயனர்கள் The Last of Us, Succession, Game of Thrones, House of the Dragon, The Wire, The Sopranos, Silicon Valley போன்ற உள்ளடக்கத்தைப் பார்க்க முடியாது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிளாட்ஃபார்மில் சமீபத்திய வெற்றிகளில் ஒன்று HBO இன் புதிய தொலைக்காட்சித் தொடரான ​​தி லாஸ்ட் ஆஃப் அஸ் ஆகும்.

மேலும் படிக்க | Remote Fans: சூப்பர் ஆஃபரில் கிடைக்கும் ரிமோட் கண்ட்ரோல் ஃபேன்கள்

ஐபிஎல் தொடரை அனுபிக்க முடியுமா?
Viacom18 க்கான ஸ்ட்ரீமிங் உரிமையை இழந்ததால், Disney + Hotstar இந்திய பயனர்களுக்கு ஐபிஎல் ஸ்ட்ரீமிங்கை வழங்காது. இது Disney + Hotstar சந்தாதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Disney + Hotstar இன் பிரீமியம் சந்தா தற்போது இந்தியாவில் ரூ.1499க்கு கிடைக்கிறது. ஐபிஎல் மற்றும் எச்பிஓ உள்ளடக்கத்தை பிளாட்ஃபார்மில் இருந்து அகற்றிய பிறகு, Disney + Hotstar சந்தாவை வாங்குவது பல இந்திய பயனர்களுக்கு யோசனையாவே இருக்கும்.

ட்வீட் மூலம் தகவல் வெளியீடு
ஒரு ட்வீட்டிற்கு பதிலளித்த @Hotstar_Helps, 'மார்ச் 31 முதல் Disney + Hotstar இல் HBO உள்ளடக்கம் கிடைக்காது. Disney + Hotstar இன் பரந்த உள்ளடக்க நூலகத்தையும், 10 மொழிகளில் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் 100,000 மணிநேர உள்ளடக்கத்தின் முதன்மையான கவரேஜையும் நீங்கள் தொடர்ந்து அனுபவிக்கலாம்.'

பல இந்திய தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் Disney + Hotstar ப்ரீபெய்ட் திட்டங்களைக் குறைத்துள்ளனர். ஐபிஎல் மற்றும் எச்பிஓ உள்ளடக்கம் ஹாட்ஸ்டாரிலிருந்து விலகியிருந்தாலும், டிஸ்னி மற்றும் மார்வெல் உள்ளடக்கத்திற்கான உரிமைகளை இயங்குதளம் கொண்டுள்ளது. இதற்காக, பயனர்கள் அதன் சந்தாவை எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க | Vi அறிமுகப்படுத்தியுள்ள புதிய ரூ.401 திட்டம்! இத்தனை சிறப்பம்சங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More