Home> Technology
Advertisement

ஏடிஎம் கார்டு பயன்படுத்தினால் 5 லட்சம் ரூபாய் இலவசம், எப்படி தெரியுமா?

ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன்பு எந்தவொரு அரசு மற்றும் தனியார் வங்கியின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்துகிறாரோ அவர் இந்தக் காப்பீட்டிற்கு தகுதியுடையவராவார்.

ஏடிஎம் கார்டு பயன்படுத்தினால் 5 லட்சம் ரூபாய் இலவசம், எப்படி தெரியுமா?

ATM Insurance Claim process: நீங்கள் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தினால், வங்கி உங்களுக்கு ரூ.5 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் கொடுக்கலாம். இது குறித்து பலருக்கு விழிப்புணர்வு இல்லை. இது ஒரு வகையான காப்பீடு ஆகும். இதற்கு கார்டுதாரரின் குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் க்ளைம் செய்யவில்லை என்றால் இந்தத் தொகை உங்களுக்கு கிடைக்காது. 5 லட்சத்திற்கு க்ளைம் (ஏடிஎம் இன்சூரன்ஸ் க்ளைம்) எப்படி செய்யலாம்? என்று இங்கே தெரிந்து கொள்வோம். 

ஏடிஎம் கார்டு இன்சூரன்ஸ்

ஏடிஎம் கார்டு மூலம் கிடைக்கும் இலவச சேவைகளில் முக்கியமானது இன்சூரன்ஸ். வங்கி ஒரு வாடிக்கையாளருக்கு ஏடிஎம் கார்டை வழங்கியவுடன், வாடிக்கையாளர் விபத்துக் காப்பீட்டைப் பெறுகிறார். ஆனால், இந்தக் காப்பீடு குறித்த போதிய அறிவு இல்லாததால், ஒரு சிலரால் மட்டுமே இதற்கான காப்பீட்டைப் பெற முடிகிறது. கிராமத்து மக்கள் ஒருபுறம் இருக்க, படித்த பலருக்கும் ஏடிஎம் விதிகள் தெரியாது. வங்கியும் இந்த தகவலை தனது வாடிக்கையாளர்களுக்கு வாய்மொழியாக வழங்குவதில்லை.

யாருக்கு காப்பீடு கிடைக்கும்?

ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு முன்பு ஏதேனும் ஒரு அரசு அல்லது தனியார் வங்கியின் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்திய கார்டுதாரர், காப்பீடு பெற உரிமையுடையவர். ஏடிஎம்-ன் காப்பீட்டில் எவ்வளவு தொகை கிடைக்கும், இவை அனைத்தும் ஏடிஎம் கார்டின் வகையைப் பொறுத்தது.

ஒவ்வொரு வகைக்கும் காப்பீடு

வங்கி அட்டைதாரர்களுக்கு பல்வேறு வகைகளின்படி காப்பீடு வழங்குகிறது. கார்டு வகைகள் கிளாசிக், பிளாட்டினம் மற்றும் இயல்பானவை. சாதாரண மாஸ்டர் கார்டில் 50,000, கிளாசிக் ஏடிஎம் கார்டுக்கு ரூ.1 லட்சம், விசா கார்டுக்கு ரூ.1.5 முதல் 2 லட்சம், பிளாட்டினம் கார்டுக்கு ரூ.5 லட்சம்.

இறந்தால் 5 லட்சம் வரை பெறலாம்

ஏடிஎம் கார்டு பயன்படுத்துபவர்கள் விபத்தில் இறந்தால், 1 முதல் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். மறுபுறம், ஒரு கை அல்லது ஒரு கால் சேதமடைந்தால், 50000 ரூபாய் வரை காப்பீடு தொகை கிடைக்கும். இதற்கு வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும். அட்டைதாரரின் நாமினி விண்ணப்பத்தை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் படிக்க | September 1 முதல் பல முக்கிய மாற்றங்கள்: உங்களுக்கு ஆதாயமா, நஷ்டமா? 

மேலும் படிக்க | ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு - ஏதேனும் ஒரு டிகிரி அவசியம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata

Read More