Home> Technology
Advertisement

அமேசான் ChatGPT: கூகுள் - மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக புது யுக்தி...!

சாட்ஜிபி ஏஐ தொழில்நுட்பத்தில் தீவிரமாக களமிறங்க திட்டமிட்டிருக்கும் அமேசான் நிறுவனம், புதிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்க ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.  

அமேசான் ChatGPT: கூகுள் - மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு போட்டியாக புது யுக்தி...!

சாட்ஜிபிடி வருகை, டெக் உலகில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் முழு வீச்சில் சாட்ஜிபிடி ஏஐ தொழில்நுட்பத்தில் களமிறங்கிவிட்டன. இரண்டு பெரிய நிறுவனங்களுன் அவற்றின் ஏஐ தொழில்நுட்ப புரொடக்டின் பெயரையும் அறிவித்திருக்கும் நிலையில், இந்த ரேஸில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கும் அமேசான் நிறுவனம். அமேசான் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி பேசும்போது, தங்கள் நிறுவனம் நீண்ட காலமாக ChatGPT போன்ற AI தொழில்நுட்பத்தில் வேலை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இப்போது அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கியிருப்பதாகவும், வணிகத்தின் இந்தப் பகுதியை மேம்படுத்துவதற்கு சிறிய நிறுவனங்களுடன் கூட்டு சேருவதற்கு விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | iPhone-ஐ அடித்து நொறுக்கி ஆப்பு வைக்க வருகிறது Nokia X30 5G: முழு விவரம் இதோ

பிரிட்டீஷ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், சாட்ஜிபிடி போன்ற ஜெனரேடிவ் ஏஐ உருவாக்கும் வேலைகளில் அமேசான் நிறுவனம் நீண்டகாலமாக வேலை செய்து வருகிறது. இது ஒரு ஆழமான தொழில்நுட்பம். வணகத்தின் இந்தப் பகுதியை மேம்படுத்துவதற்கு சிறிய நிறுவனங்களுடன் கூட்டுசேர்வதற்கான வாய்ப்புகளையும் அமேசான் பரிசீலித்து கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார். அதேநேரத்தில் அமேசான் ஏஐ குறித்த விவரங்களை அறிவிக்கவில்லை. கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இதில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நிலையில், அமேசானும் ஏஐ தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்பது மட்டும் தெளிவாகிறது. 

அமேசான் முதலீட்டாளர்கள் பொறுத்தவரை அந்த நிறுவனம் இன்னும் ஏஐ தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருப்பதாகவே கருதுகின்றனர். கடந்த ஓராண்டில் ஏஐ தொழில்நுட்பம் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருக்கும் நிலையில், ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடுத்தக்கட்டத்துக்கு செல்ல அமேசான் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதன் முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். 

மேலும் படிக்க | இவ்ளோ காஸ்ட்லி ஃபோன் வெறும் ரூ.999க்கா? அலைமோதும் மக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More