Home> Technology
Advertisement

Flipkart Sale: காதலர் தினத்தை ஒட்டி சாம்சங் போனில் கன்னாபின்னானு தள்ளுபடி, முந்துங்கள்!!

Samsung Smartphone Discount in Flipkart: ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ள மக்கள், இந்த அதிரடியான சலுகையை பயன்படுத்தி விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை வீட்டில் இருந்தபடியே மிகவும் மலிவான விலையில் வாங்கலாம். 

Flipkart Sale: காதலர் தினத்தை ஒட்டி சாம்சங் போனில் கன்னாபின்னானு தள்ளுபடி, முந்துங்கள்!!

Samsung Smartphone Discount: ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் தொடங்கியுள்ள காதலர் தின தள்ளுபடி சலுகை சில நாட்களுக்கு நீடிக்கும். இந்த சலுகையில், சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு மிகப்பெரிய தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் சில ஸ்மார்ட்போன்களை மக்கள் மொத்த விலையில் வாங்க தற்போது வாய்ப்பு கிடைக்கும். ஸ்மார்ட்போன் வாங்கும் எண்ணத்தில் உள்ள மக்கள், இந்த அதிரடியான சலுகையை பயன்படுத்தி விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்களை வீட்டில் இருந்தபடியே மிகவும் மலிவான விலையில் வாங்கலாம். 

பண்டிகை காலங்களில் கிடைக்கும் தள்ளுபடி சலுகையை விட இந்த தள்ளுபடி மிக பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. காதலர் தினத்துக்காக பிளிப்கார்ட்டில் வழங்கப்படும் சலுகை விவரங்களை இந்த பதிவில் காணலாம். 

இந்த ஸ்மார்ட்போனில் கிடைக்கும் அதிரடியான தள்ளுபடி 

ஃபிளிப்கார்ட் SAMSUNG Galaxy F13 (Waterfall Blue, 64 GB) (4 GB RAM) ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய தள்ளுபடியை வழங்குகிறது. இதில் வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த தொகையை செலுத்தி இந்த சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். நீங்களும் இந்த நேரத்தில் ஸ்மார்ட்போன் வாங்கினால், மிகப்பெரிய தொகையை சேமிக்கலாம். 

மேலும் படிக்க | Flip Heart Days Sale 2023: காதலர் வார குதூகலம், பிளிப்கார்ட்டில் 80% தள்ளுபடி, குஷியில் கஸ்டமர்ஸ்

இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.14,999 ஆகும். எனினும், இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 34 சதவீதம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அதன் லிஸ்டட் விலை ரூ. 9,799 ஆக குறைந்துவிடும். இந்த விலையும் அதிகம் என உங்களுக்குத் தோன்றினால், கவலை ஏண்டாம். இந்த ஸ்மார்ட்போனை இன்னும் பலிவான விலையிலும் வாங்க முடியும். 

இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது பிளிப்கார்ட் ரூ. 9,250 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், அதாவது பரிமாற்ற சலுகை வழங்கப்படுகிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் போனஸை முழுமையாக பயன்படுத்திகொண்டால், வாடிக்கையாளர்கள் வெறும் ரூ. 549 செலுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். 

இந்த வகையில் இந்த சலுகை ஒரு மிக லாபகரமான சலுகையாக உள்ளது. இந்தச் சலுகை இன்னும் சில நாட்களில் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் சேமிக்க விரும்பினால், இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | மலிவான விலையில் ஒன் பிளஸ் 5G போன்! ரூ. 17600 அதிரடி தள்ளுபடி

 

Read More