Home> Technology
Advertisement

எச்சரிக்கை! Apple ஏர் டிராப்பில் மிகப்பெரிய பிழை!

ஆப்பிளின் (Apple) ஏர் டிராப் பயனர்கள் ஒரு சிக்கலைக் கண்டறிந்துள்ளனர். ஏர் டிராப் பயன்படுத்தும் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

எச்சரிக்கை! Apple ஏர் டிராப்பில் மிகப்பெரிய பிழை!

புதுடெல்லி: ஆப்பிளின் (Apple) ஏர் டிராப் பயனர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏர் டிராப் பயன்படுத்தும் பயனர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆப்பிளின் ஏர் டிராப்பில் ஒரு புதிய பிழை வந்துள்ளது. இந்த பிழை உங்கள் முக்கியமான தகவல்களைத் திருட ஹேக்கர்களுக்கு உதவுகிறது. இந்த பிழை மூலம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற உங்கள் முக்கியமான தகவல்களை ஹேக்கர்கள் திருடலாம்.

Email முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை பாதுகாப்பாக வைத்திருங்கள்
அறிக்கையின்படி, ஏர் டிராப்பின் புதிய பிழையிலிருந்து அறியப்படாத எந்தவொரு நபரின் முக்கியமான மற்றும் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களை (Hackers) அடையலாம். இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதன் மூலம், உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எந்த ஹேக்கர்களும் அணுகலாம். மேலும் அந்த தகவல்களை தவறாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

ALSO READ | Alert: மிக ஆபத்தான 8 App; இவை மொபைலில் இருந்தால் கணக்கில் பணம் காலியாகலாம்

ஹேக்கர்கள் இவ்வாறு திருடுகிறார்கள்
உங்கள் அத்தியாவசிய தகவல்களைத் திருட ஹேக்கர்களுக்கு வைஃபை அணுகல் உள்ள சாதனம் தேவை. இது மட்டுமல்லாமல், பகிர்வு பயன்முறையில் எந்த iOS சாதனம் இருக்கிறது என்பதை அவர்கள் சோதித்துக்கொண்டே இருப்பார்கள். இந்த தகவல்களைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் உங்கள் தொலைபேசி எண்களை  வசதியாக அணுகலாம். ஆப்பிளின் ஹேஷிங் வழிமுறை பலவீனமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஹேக்கர்கள் தகவல்களைத் திருடுவதற்கான முக்கியமான வழியாக இது மாறி வருகிறது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More