Home> Technology
Advertisement

AIRTEL: ஏர்டெல் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சூப்பர் திட்டங்கள்

Airtel Disney Plus Hotstar:  ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இலவச ஹாட்ஸ்டார் சந்தாவுடன் அழைப்பு மற்றும் டேட்டா பலன்களுடன் உள்ள ஏர்டெல்  ரீசார்ஜ் திட்டங்கள்  

AIRTEL: ஏர்டெல் இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் சூப்பர் திட்டங்கள்

மும்பை: ஏர்டெல் சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி அல்லது புதிதாக வெளியிடப்பட்ட திரைப்படத்தைப் பார்க்க இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது உங்கள் ஏர்டெல். டெல்கோ ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இலவச ஹாட்ஸ்டார் சந்தாவுடன் அழைப்பு மற்றும் டேட்டா பலன்களுடன் ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.  

ஏர்டெல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கும் பல ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிலையான திட்டங்களை விட, சற்று கூடுதலான கட்டணத்தில் OTT சந்தாவை இலவசமாகக் கொடுக்கிறது.  

மேலும் படிக்க | ரெட்மி நோட் 11டி ப்ரோ போனில் தீ பற்றி எரியும் வீடியோ வைரல்!

ஏர்டெல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஏர்டெல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ரீபெய்ட் திட்ட்டங்கள், இரண்டு பிரிவில் உள்ளன.  Disney Plus Hotstar 3 மாத சந்தா மற்றும் Disney Plus Hotstar 1 வருட சந்தா என்ற இரு வகைகளில் கிடைக்கிறது இந்தத் திட்டங்கள்.

3 மாத டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா பேக் ரூ. 399இல் தொடங்குகிறது, இதில் ஏர்டெல் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி 28 நாட்களுக்கு வழங்குகிறது, அடுத்த பிளானின் விலை ரூ. 839, இதில் 84 நாட்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் 1 ஆண்டு சந்தா பேக் ரூ.499 இல் தொடங்குகிறது, இதில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.  ரூ.599 விலையில் உள்ள திட்டத்தில் 28 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 ஜிபி கிடைக்கும்.

365 நாட்களுக்கு, அதாவது ஆண்டு முழுவதும், நாளொன்றுக்கு 2.5 ஜிபி வழங்கும் வருடாந்திர ரீசார்ஜ் திட்டம் உள்ளது, இதன் விலை ரூ. 3359. இது வருடாந்திர சந்தா திட்டம் ஆகும்.  

மேலும் படிக்க | SMS மூலம் பாஸ்டேக் பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம்; ரொம்ப ஈஸி

ஏர்டெல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ரீசார்ஜ் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவுடன் நான்கு போஸ்ட்பெய்ட் திட்டங்களை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.499 மாத கட்டணத்தில் தொடங்கு இவை மொத்தம் 4 திட்டங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

ரூ.499 மாதாந்திர பேக்கில், வரம்பற்ற உள்ளூர் எஸ்டிடி அழைப்புகள் மற்றும் தேசிய ரோமிங்குடன் கூடிய 75 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள்.

 ரூ.999 திட்டத்தில், எஸ்டிடி அழைப்புகளுக்கும், உள்ளூர்கள் தொலைபேசி சேவைக்கும் இலவசம் என்பதுடன் தேசிய ரோமிங்குடன் 100ஜிபி டேட்டா கிடைக்கும்.  

இரண்டு மாத வாடகைத் திட்டங்கள் ரூ. 1,199 மற்றும் ரூ. 1,599 இல் தொடங்குகின்றன, இதில் முதல் திட்டம் 150 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, இரண்டாவது திட்டத்தில் 250 ஜிபி டேட்டா அடங்கும். இரண்டு திட்டங்களும் தேசிய ரோமிங்குடன் உள்ளூர் எஸ்டிடிக்கு வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றன. 

மேலும் படிக்க | Tips and Ticks: வாட்ஸ்அப் மூலம் சுலபமாக ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்வது எப்படி? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More