Home> Technology
Advertisement

அசத்தலாய் அறிமுகம் ஆனது ஏர்டெல்லின் புதிய திட்டம்: ரூ.119-ல் எக்கச்சக்க நன்மைகள்

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைப் பெறும் முயற்சியில், தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்  பயனர்களுக்காக ஒரு புதிய டேட்டா ஆட்-ஆன் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. 

அசத்தலாய் அறிமுகம் ஆனது ஏர்டெல்லின் புதிய திட்டம்: ரூ.119-ல் எக்கச்சக்க நன்மைகள்

Airtel new plans: இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைப் பெறும் முயற்சியில், தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்  பயனர்களுக்காக ஒரு புதிய டேட்டா ஆட்-ஆன் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ரூ 119 ப்ரீபெய்ட் திட்டம் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் தற்போதைய திட்டங்களுடன் கூடுதல் தரவை பெறுவார்கள். ஏனினில், இந்த திட்டத்தில் தரவு இழப்புக்கான கவலை இருக்காது.

பல்வேறு விலை வரம்புகளில் தற்போது கிடைக்கும் பல டேட்டா பேக்குகளுக்கு கூடுதலாக புதிய ஆட்-ஆன் பேக் வருகிறது. புதிய ரூ .119 ஏர்டெல் (Airtel) திட்டம் பயனர்களுக்கு 15 ஜிபி 4 ஜி டேட்டாவை வழங்குகிறது. இது ஒரு ஆட்-ஆன் பேக் என்பதால், இதற்கான சொந்த செல்லுபடி இருக்காது. அதாவது, பயனர்களின் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வரை அது நீடிக்கும்.

இந்த திட்டத்தில் அழைப்பு வசதிகளோ எஸ்எம்எஸ் நன்மைகளோ கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவற்றை பெற, பயனர்கள் வரம்பற்ற திட்டங்களில் ஏதேனும் ஒன்றை வைத்திருக்க வேண்டும்.

ALSO READ: Airtel அட்டகாசம்: மிகக்குறைந்த விலையில் எக்கச்சக்க நன்மைகள், ஏராளமான தரவு

மேலும், இந்த திட்டம் பயனர்களுக்கு எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக்கையும் வழங்குகிறது. இது அவர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் செயலியில் ஈரோஸ்நவ், ஹோய்சோய், மனோரமா மேக்ஸ் (ErosNow, Hoichoi, ManoramaMax) ஆகியவற்றுக்கான இலவச அணுகலை அனுமதிக்கிறது. இது 30 நாட்களுக்கு பொருந்தும்.

இந்த திட்டம் மற்ற ஆட்-ஆன் பேக்குகளின் பட்டியலில் இணைகிறது. இந்த பட்டியலில் ரூ .48, ரூ .78, ரூ .89, ரூ .98, ரூ .131, ரூ .248 மற்றும் ரூ .251 திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் அனைத்தும் பயனர்கள் கொண்டுள்ள திட்டங்களின் செல்லுபடி காலத்தை கொண்டிருக்கும். ரூ .48, ரூ .98 மற்றும் ரூ .251 பேக்குகள் கூடுதல் தரவை மட்டுமே வழங்குகின்றன. மற்ற திட்டங்கள் பல்வேறு பொழுதுபோக்கு தளங்களுக்கான அணுகல் என்ற கூடுதல் நன்மைகளையும் அளிக்கின்றன.

இதற்கிடையில், ஏர்டெல் சமீபத்தில் இலவச டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney Hotstar) சந்தாவுடன் வரும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ரூ .499 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, 30 நாட்களுக்கான அமேசான் பிரைம் வீடியோ மொபைல், விங்க் மியூசிக் ஃப்ரீ, இலவச ஹெலோடூன்ஸ், அப்போலோ 24/7 சர்கிள், ஒரு வருடத்திற்கான இலவச ஆன்லைன் கோர்சுகள் மற்றும் FASTag ரீசார்ஜில் 100 ரூபாய் கேஷ்பேக் ஆகியவை கிடைக்கின்றன. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ALSO READ: Airtel Black: ஏர்டெலின் இந்த ரீச்சார்ஜில் கிடைக்கும் பல நன்மைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More