Home> Tamil Nadu
Advertisement

ஸ்கேட்டிங் விழிப்புணர்வு : குமரி டூ காஷ்மீர் - கிட்ட நெருங்குகையில் உயிரிழந்த இளைஞர்!

Skating Awareness Youth Death :  ஒரு லட்சியத்திற்காக குமரி முனையில் இருந்து காஷ்மீர் நோக்கிப் புறப்பட்ட துடிப்புமிக்க இளைஞர், தனது லட்சியக் கனவின் இலக்கை நெருங்குகையில் உயிரிழந்த துயரம்!   

ஸ்கேட்டிங் விழிப்புணர்வு : குமரி டூ காஷ்மீர் - கிட்ட நெருங்குகையில் உயிரிழந்த இளைஞர்!


கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறு மூடு பகுதியை சார்ந்தவர் அனஸ் ஹஜாஸ். இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், முதலில் தனியார் ஐடி துறையில் வேலை செய்து வந்துள்ளார். அதன் பிறகு தனியார் பள்ளியிலும் பணிபுரிந்துள்ளார். அனஸ் ஹஜாஸ், ஸ்கேட்டிங் மீதுள்ள அடங்காத ஆர்வத்தால் யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாகவே ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்துள்ளார். 

மேலும் படிக்க | மாரத்தானில் ஓடிய டைப் 1 நீரிழிவு நோயாளிகள்..!

ஸ்கேட்டிங்கில் பல சாகசங்கள் செய்து பரிசுகளையும் குவித்துள்ளார். புதிதாக சாதிக்க வேண்டும் என  எண்ணியவர், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சாகசம் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். 

fallbacks

இதற்காக கடந்த மே மாதம் 29ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஸ்கேட்டிங் சாகசப் பயணத்தைத் துவங்கினார். மதுரை ,பெங்களூர், ஹைதராபாத், வழியாக பயணித்தவர் மத்திய பிரதேசம், உத்திரபிரதேசத்தை கடந்து ஹரியானா மாநிலத்தை அடைந்துள்ளார். இன்னும் சுமார் 15 நாட்களில் காஷ்மீர் சென்று தனது சாகச பயணத்தை நிறைவு செய்ய இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை லாரி ஒன்று மோதிய விபத்தில் மரணம் அடைந்துள்ளார். 

அனஸ் ஹஜாஸ் செல்போனுக்கு நண்பர் ஒருவர் அழைத்த போது, எதிர்முனையில் பேசியவர் இந்த அதிர்ச்சி சம்பவத்தைக் கூறியுள்ளார். ஹரியானா மாநிலம் பஞ்சகுதா பகுதி அருகே விபத்தில் சிக்கியதாகவும் அவரை அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தும் காப்பாற்ற முடியவில்லை எனவும் தகவல் தெரியவந்துள்ளது. அனஸ் ஹாஜாஸின் உடலைப் பெறுவதற்காக அவரது பெற்றோர்கள் ஹரியானா சென்றுள்ளனர். 

fallbacks

முக்கிய நிகழ்வுகள் குறித்தும், தான் கடந்து சென்ற இடங்கள் குறித்தும் முகநூலில் வீடியோ பதிவிட்டு வந்தார் அனஸ். குமரி முதல் காஷ்மீர் வரை ஸ்கேட்டிங் பயணத்தை முடித்து சாதனை படைக்க இருந்த அனஸ்  விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் அனசை சமூக வலைதளங்களில் பின் தொடர்ந்தவர்களுக்கும், ஸ்கேட்டிங் ஆர்வலர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | Watch Viral Video: நீருக்கடியில் உடற்தகுதி குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் இளைஞன்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More