Home> Tamil Nadu
Advertisement

புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை கார்த்திக்! 6 மணி நேரம் வாள்வீசி சாதனை

World Record: புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறுவன் தற்காப்பு கலையான வாள் வீச்சை தொடர்ந்து ஆறு மணி் நேரம் சுற்றி சாதனை படைத்தார்

புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை கார்த்திக்! 6 மணி நேரம் வாள்வீசி சாதனை

கோவை: புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிறுவன் கார்த்திக், தொடர்ந்து ஆறு மணி் நேரம் வாள் வீசி, சாதனை படைத்தார். கோவை சின்ன வேடம் பட்டி பகுதியை சேர்ந்த, அழகர் சாமி, கீதா, தம்பதியினரின்,மகன் கார்த்திக்.14 வயதான இவர்,புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சிலம்பம் கலையின வாள் வீச்சை தொடர்ந்து ஆறு மணி நேரம் சுற்றி மூன்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

முன்னதாக துடியலூர் பகுதியில் உள்ள  கார்த்திக்கின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அதிகாலையில் தனது சாதனையை துவக்கிய கார்த்திக் ஆறு மணி நேரம் வாள் வீசி சாதனை படைத்தார்.

மேலும் படிக்க | மருத்துவமனையில் நடிகை சமந்தா; அரிய வகை தோல் நோயால் பாதிப்பு

சிறுவன் கார்த்திக்கின் இந்த சாதனை இந்தியா உலக சாதனை, அமெரிக்கன் உலக சாதனை, மற்றும் யுரோப்பியன் உலக சாதனை என மூன்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது…

இளைஞர்கள் மது, புகையிலை, கஞ்சா போன்ற தீய வஸ்துக்களில் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 6 மணி நேரம், இடை விடாமல் ஒற்றை கைகளில் வால் வீசி, உலக சாதனை படைத்த சிறுவன் கார்த்திக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த சாதனையை செய்த சிறுவன், அவரது பயிற்சியாளர் மற்றும் பெற்றோர் என அனைவரும், விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்கள். அதில், அவர்கள், சிறுவனுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சி, கார்த்திக்கின் ஆர்வம், புற்றுநோயின் தாக்கம் என பல்வேறு விஷயங்களைப் பற்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க | சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய அனிரூத்: ஏ.ஆர்.ரகுமான் பக்கம் சாய்ந்த லைகா

14 வயது சிறுவன் கார்த்திக்கிடம் இருக்கும் உத்வேகமும், சமூகம் தொடர்பான பார்வையும் அனைத்து சிறார்களுக்கும் மாணவர்களுக்கும் ஏற்பட வேண்டும் என அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைவரும் தெரிவித்தனர்.

மூன்று சாதனை புத்தகங்களின் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் 14 வயது சிறுவன் கார்த்திக்குக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மேலும் படிக்க |  ராணி எலிசபெத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த சீன பிரதிநிதிகளுக்கு தடை! பின்னணி இதுதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More