Home> Tamil Nadu
Advertisement

ராமர் பாலத்தை அகற்ற முடியாது! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு!

சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது. பாலத்தை சேதப்படுத்தாமல், வேறு பாதையில் திட்டத்தை செயல்படுத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ராமர் பாலத்தை அகற்ற முடியாது! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு!

சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது. பாலத்தை சேதப்படுத்தாமல், வேறு பாதையில் திட்டத்தை செயல்படுத்தப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவின் ராமேசுவரத்துக்கும், இலங்கையின் மன்னார் தீவுகளுக்கும் இடையே கடலுக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்களால் ஆன பகுதிதான் ராமர் பாலம் உள்ளது.  ராமாயண காலத்தில் ராமர் இலங்கைக்கு சென்று சீதையை மீட்பதற்காக வானரப் படைகளைக் கொண்டு இந்த பாலத்தைக் கட்டினார் என்று கூறப்படுகிறது.

இந்தப் பாலம் அமைந்துள்ள பகுதி ஆழமின்றி காணப்படுவதால், கப்பல்கள் இதனைச் சுற்றி வந்து சுமார் 400 கி.மீ. தூரம் கூடுதலாக பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ராமர் பாலம் அமைந்துள்ள பகுதியில் சேது சமுத்திரத் திட்டம் என்ற பெயரில் கடலை ஆழப்படுத்தும் திட்டத்தை கடந்த 2005-ம் ஆண்டில், அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தொடங்கியது. எனினும் எதிர்ப்பு ஏற்பட்டதை அடுத்து 2009-ஆம் ஆண்டில் இத்திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் ராமர் பாலத்தை அகற்ற முடியாது எனவும், வேறு பாதையில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டது: 

சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது. பாலத்தை சேதப்படுத்தாமல், வேறு பாதையில் திட்டத்தை செயல்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Read More