Home> Tamil Nadu
Advertisement

பட்டாசு மீதான தடை.. கேள்விக்குறியாகும் சிவகாசி பட்டாசு ஆலைகளின் நிலை..!!!

அனைவர் வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளி, பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு தொழிலாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

பட்டாசு மீதான தடை.. கேள்விக்குறியாகும் சிவகாசி பட்டாசு ஆலைகளின் நிலை..!!!

அனைவர் வாழ்விலும் ஒளியேற்றும் தீபாவளி, பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கு தொழிலாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 9 முதல் நவம்பர் 30 வரை தில்லி மற்றும் தில்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) முழு தடை விதித்துள்ளது. மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, காற்றின் தரம் நன்றாக இருக்கும் இடத்தில், தீபாவளியில் சுற்று சூழலை பாதிக்காத வகையில் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் என்று என்ஜிடி கூறியுள்ளது. சட்டவிரோத பட்டாசு விற்பனையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இத்தகைய சூழ்நிலையில், தீபாவளிக்கு முன்னர் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் அவற்றை வெடிப்பதற்கும் மாநிலங்கள் விதித்த கட்டுப்பாடுகள் பட்டாசு தயாரிப்பில் உள்ளவர்களுக்கு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன. நாட்டில் விற்கப்படும் பட்டாசுகளில் 80 சதவீதம் சிவகாசியில் தயாரிக்கப்படுவதால், தமிழ்நாட்டின் சிவகாசியில் கலவை மேகங்கள் சூழ்ந்துள்ளது. பட்டாசு வியாபாரத்தின் மூலம் சுமார் ஐந்து லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது.

அகில இந்திய பட்டாசு சங்கத்தின் அளித்துள்ள தரவுகளின் படி சிவகாசியில் 1070 நிறுவனங்கள், பட்டாசு தயாரிப்பிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு சிவகாசியில் மட்டும் 6000 கோடி ரூபாய் அளவிற்கு விற்பனை நடந்தது. நாட்டில் சுமார் 9000 கோடி அளவிற்கு வணிகம் நடக்கிறது. சிவகாசியில் பட்டாசு வணிகம் நேரடியாக மூன்று லட்சம் மக்களின் வாழ்க்கையுடன் இணைந்துள்ளது. மொத்தம் ஐந்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசியில் இருந்துதான் உற்பத்தியாகிறது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முன்பே, தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு  ஏற்கனவே தில்லி, ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்கள் தடை விதித்துள்ளன. இதனால் சிவகாசி பட்டாசு விற்பனை பெருமளவில் பாதிக்கப்படும். 

ALSO READ | பென்ஷன் பெறுபவர்கள் இனி வீட்டிலிருந்த படியே உயிர்வாழ் சான்றிதழை பெறலாம்..!!!

வெடிபொருள் விதிகள் 2008 இன் கீழ் பட்டாசுகளை இறக்குமதி செய்வதற்கான எந்தவொரு உரிமத்தையும் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு வழங்கவில்லை. ஆனால் நாட்டில் சுமார் 30 சதவீதம் பட்டாசு சட்டவிரோதமாக சீனாவிலிருந்து வருகிறது. சீன பட்டாசுகள் இந்திய பட்டாசுகளை விட 30 முதல் 40 சதவீதம் வரை மலிவானவை.

இந்த ஆண்டு நாட்டில் பட்டாசுகளின் விலை 10 முதல் 15 சதவீதம் அதிகமாக இருக்கும். இதற்கு முக்கிய காரணம் சீன பட்டாசுகள் இறக்குமதியை இந்தியா முழுமையாக தடை செய்துள்ளது. இதனுடன், சுற்று சூழலை பாதிக்காத வகையில், பசுமை பட்டாசுகளை பயன்படுத்த  வலியுறுத்தப்படுகின்றன. ஏனெனில் அவற்றின் வெடிக்க செய்யும் போது, அவை 40 முதல் 50 சதவீதம் வரை குறைவான மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக பட்டாசுகளின் விலை அதிகரிக்கும். பச்சை பட்டாசுகள் ஒப்பிடத்தக்க அளவில் விலை அதிகமான பட்டாசுகள் ஆகும்.

கொரோனாவால் பெருமளவில் பாதிக்கப்பட்ட சிவகாசி பட்டாசு ஆலை ஊழியர்கள் வாழ்க்கையில், தீபாவளிக்கு பட்டாசு விற்பனை ஒளியேற்றும் என்ற நம்பிக்கையில் மண் விழுந்துள்ளது. தீபாவளியில் பெரிய அளவில் விற்பனை நடக்கும் என்று நமபி எதிர்பார்த்த நிலையில் பட்டாசின் மீதான தடை அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால் தயாரித்த பட்டாசுகளை விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்களும் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ |  ரயில்வே டிக்கெட் முன்பதிவு விதிகளில் மாற்றம்.. இனி டிக்கெட் வாங்குவது மிக எளிது..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More