Home> Tamil Nadu
Advertisement

அதிமுகவை யாரும் அசைக்க முடியாது!! ஈபிஎஸ் - ஓபிஎஸ் மாஸ்டர் ப்ளான்!!

ஏன் நான்கு எம்எல்ஏ-க்களும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பு அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

அதிமுகவை யாரும் அசைக்க முடியாது!! ஈபிஎஸ் - ஓபிஎஸ் மாஸ்டர் ப்ளான்!!

சென்னை: 2019 மக்களவையின் இரண்டாம் கட்டத்தேர்தல் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்றது. அதில் தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிக்கும், 18 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்து முடிந்தது. மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற விருக்கின்றன. அதாவது மொத்தம் 22 சட்டசபை தொகுதி என ஒரு மினி சட்டசபை தேர்தலை தமிழகம் எதிர்கொண்டு உள்ளது. தேர்தலுக்கான முடிவுகள் அடுத்த மாதம் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

ஒருவேளை தேர்தல் முடிவில் அதிமுகவுக்கு சாதகமான சூழ்நிலை வரவில்லை என்றால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. தமிழக சட்டபேரவையில் பெரும்பான்மையை நிருப்பிக்க முடியாத சூழல் உருவாகும். 

ஏன் அப்படி ஒரு நிலை உருவாகும்: பார்போம்

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 136 ஆகும். பின்னர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து எண்ணிக்கை 135 ஆகா குறைந்தது. பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி இரண்டாக உடைந்தது. சசிகலாவும் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றார். சில சமாதனம் முயற்சிக்கு பிறகு அதிமுகவுடன் ஓபிஎஸ் அணி இணைந்தது. இதனால் கோபமடைந்த டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து வெளியேறினார். ஜெயலலிதா மறைவை அடுத்து காலியாக இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நின்று டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். 

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்கள் செயல்படுவதாக கூறி மொத்தம் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் அதிமுகவின் எண்ணிக்கை 117 ஆகா குறைந்தது. சில நாட்கள் கழித்து மேலும் ஒரு எம்எல்ஏ (ஓசூர்) தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையில் சூலூர், திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்எக்கள் மறைவு. இப்படி அதிமுகவின் எண்ணிக்கை 114 ஆக குறைந்தது. 

தற்போது தமிழக சட்டசபையில் அதிமுகவின் பலம் 114 எம்எல்ஏக்களாக உள்ளது. 22 சட்டசபை இடைத்தேர்தலில் குறைந்தது 4 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியே ஆக வேண்டும். இல்லையென்றால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்ப்படும். தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிருபிக்க 118 எம்எல்ஏக்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

22 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் அடுத்த மாதம் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. ஒருவேளை சாதகமான முடிவு வராவிட்டால், தகுதி நீக்கம் முடிவு கைக்கொடுக்கும் என்ற அடிப்படையில் அறந்தாங்கி தொகுதி எம்எல்ஏ ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் மற்றும் நாகப்பட்டினம் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அதிமுக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை நான்கு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தால் சட்டசபையின் இடங்கள் 230 ஆக குறையும். எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக இருந்தால் பெரும்பான்மை காட்டி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளலாம். அதேபோல இடைத்தேர்தலில் குறைந்தது 8 முதல் 10 இடங்களை அதிமுக வெற்றி பெற்றால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் வராது.

Read More