Home> Tamil Nadu
Advertisement

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசு ஏன் பொறுப்பாக்கக்கூடாது?: HC

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசு ஏன் பொறுப்பாக்கக்கூடாது?: HC

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..

சென்னை : மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தமிழக பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வருமானம் மது விற்பனையால் கிடைப்பது துரதிர்ஷ்டவசமானது என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். 

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான வழக்கில் கோவையை சேர்ந்த  இருவர் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவருக்கும் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கிய நீதிபதிகள், தமிழகத்தில் சொந்த மக்களுக்கு மதுபான விற்பனையை தமிழக அரசே ஏற்று நடத்தி வருகிறது. ஆண்டிற்கு இதன்மூலம் 31 ஆயிரத்து 751 கோடி ரூபாய் வருவாய் வருகின்ற நிலையில் மற்ற பொருளாதார அடிப்படையில் ஐந்தில் ஒரு பங்கு மது விற்பனையின் மூலம் அரசு வருவாய் ஈட்டுவது வேதனையளிக்கிறது. 

மதுவை அரசே விர்ப்பதால் மது போதையில் நடக்கும் குற்றங்களுக்கு ஏன் மாநில அரசே பொறுப்பேற்க கூடாது?. குடிபோதையில் விபத்துகள் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், பாலியல் கொடூரங்கள் என எண்ணற்ற சம்பவங்கள் நடக்கிறது. அதற்கெல்லாம் ஏன் அரசே பொறுப்பேற்க கூடாது என கூறிய நீதிபதிகள் இது தொடர்பாக வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழ அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Read More