Home> Tamil Nadu
Advertisement

தீவிர ஆலோசனையில் விஜய்.. தள்ளிப்போகும் தவெக முதல் மாநாடு? காரணம் இதுதாங்க!

Vijay-Led TVK Party's 1st Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தேதி மாற்றப்பட வாய்ப்பு. அடுத்து எப்பொழுது டிவிகே (TVK) மாநாடு நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

தீவிர ஆலோசனையில் விஜய்.. தள்ளிப்போகும் தவெக முதல் மாநாடு? காரணம் இதுதாங்க!

Tamilaga Vettri Kazhagam Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இம்மாதம் 23 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தில் மாநாடு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், தற்பொழுது அதில் மாற்றம் இருக்கக்கூடும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இந்த விவகாரம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த மாதம் 23 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தினுடைய மாநாடு நடைபெறும் என இருந்த நிலையில், தற்பொழுது அது அக்டோபர் இரண்டாவது வாரத்திற்கு மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். 

முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தினுடைய முதல் மாநாடு செப்டம்பர் 23 ஆம் தேதி நடத்துவதற்கு நடிகர் விஜய் தரப்பில் மாநாட்டிற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக விக்ரவாண்டி அருகே ஒரு கிராமத்தில் இடத்தேர்வு செய்து மாநாடு பணிகள் துவங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் படிக்க - 2026இல் விஜய் தான்... மஞ்சள் கலர் தான் இங்க விஷயமே... ஜோதிடர் சொல்லும் பரபரப்பு தகவல்கள்

அதேநேரத்தில் இந்த மாநாடு நடத்துவதற்காக காவல்துறை அனுமதி வேண்டும் என்பதால், காவல்துறையின் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நடிகர் விஜய் தரப்பி‌ல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து 33 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. 

ஆனால் ஒரு பக்கம் அனுமதி வழ்ங்கப்பட்டாலும், மாநாடு நடத்துவதற்கான கால அவகாசம் குறைவாக இருக்கிறது. அதாவது இன்னும் 10 நாட்களுக்குள் மாநாட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தினுடைய மாநாடு என்பது திட்டமிட்டபடி செப்டம்பர் 23 ஆம் தேதி நடைபெறுமா? என்ற ஒரு கேள்வி என்பது எழுந்தது. ஆனால் தமிழக வெற்றிக் கழக மாநாடு குறித்து நடிகர் விஜய் தரப்பில் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

அதாவது வரும் அக்டோபர் மாதத்தில் இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அக்டோபர் மாதம் மழைக்காலம் என்பதாலும், தீபாவளி மாதம் என்பதாலும் மாநாடு நடத்துவதற்கு ஏதுவாக இருக்குமா? என்ற கேள்வியும் மறுபுறம் எழுந்துள்ளது. 

மேலும் படிக்க - கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது - ஆர் எஸ் பாரதி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More