Home> Tamil Nadu
Advertisement

kalaignar centenary: பிரம்மாண்டமான அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்! சிறப்பு

Alanganallur Jallikattu Stadium: கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்: 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடியில் அமையும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம்

kalaignar centenary: பிரம்மாண்டமான அலங்காநல்லூர் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்! சிறப்பு

மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பெயர்  பெற்ற ஊர். இங்கு, பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து, அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கும் பணி இறுதிக் கடத்தை எட்டி வருகிறது.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரையில் சுமார் ரூ.66 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்குக்கு, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் இந்த அரங்கை திறந்து வைக்கவுள்ளார்.

புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் பிரமாண்டமான முறையில், கண்கவர் வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அரங்கம் கட்டும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளன்நிலையில், பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Pongal Nalla Neram 2024 : பொங்கல் வைக்க நல்ல நேரம், வழிபாட்டு முறைகள் - முழுவிவரம்

பொங்கல் முடிந்த பிறகு, ஜனவரி 23ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என்ற ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைக்க உள்ளார்.

ஜல்லிக்கட்டு அரங்கத்தின் முகப்பில் "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" எனப் பெயர் பொறிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு பல திட்டங்களுக்கும், கட்டுமானங்களுக்கும் கலைஞர் கருணாநிதியின் பெயரை வைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கும் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, சில வாரங்களுக்கு முன்னதாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல், கடந்த ஒரு வருடத்தில் கலைஞரின் பெயர் சூட்டப்பட்ட இடங்கள் எவையெவை என்று தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | Pongal: ரயில் டிக்கெட் புக் பண்ண வேண்டாம்..! ஹேப்பியா ஊருக்கு போய்டு சென்னை வாங்க.!

கலைஞர் 100 இலட்சினை வெளியீடு 
முன்னதாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் “கலைஞர் 100” என்ற இலட்சினையை வெளியிட்டார். 

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 15.06.2023 அன்று சென்னை, கிண்டி, கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.  240.54 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டது இந்த கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. 

கலைஞர் நூற்றாண்டு நூலகம்
மதுரை புதுநத்தம் சாலையில் 2,13,338 சதுர அடி பரப்பளவில், 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கலைஞர் நூற்றாண்டு நூலகம்15.07.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்  

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை டிசம்பர் 30ஆம் தேதியன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.  சுமார் 394 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | PTR Palanivel Thiagarajan: பிடிஆரிடம் ஆக்ரோஷமாக கேள்வி எழுப்பிய நபரால் பரபரப்பு

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்

மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் சுமார் ரூ.66 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்குக்கு, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் இந்த அரங்கை திறந்து வைக்கவுள்ளார் என அமைச்சர் மூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்.

கீழக்கரை கிராமத்தில் 67 ஏக்கர் பரப்பளவில் ரூ.44 கோடியில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த அரங்கம், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தயாராகிவிடும்.  

மேலும் படிக்க | Consecration ceremony: அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கில் சனாதன விதிமுறைகள் பின்பற்றப்படுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More