Home> Tamil Nadu
Advertisement

Unlock 5.0 : திரையரங்குகள், சுற்றுலா மையங்கள் திறக்கப்படுமா...!!!

ஐந்தாம் கட்ட அன்லாக் நடவடிக்கையில், கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளுடன் திரை அரங்குகள், அதாவது தியேட்டர்கள் மீண்டும் செயல்பட மத்திய உள்துறை அனைச்சகம் அனுமதிக்கும் என்று யூகங்கள் பரவி வருகின்றன.

Unlock 5.0 : திரையரங்குகள், சுற்றுலா மையங்கள் திறக்கப்படுமா...!!!

அக்டோபர் 1 ஆம் தேதிக்கு  5ம் கட்ட அன்லாக் (Unlock 5.0) தொடங்க உள்ள நிலையில்,  அதற்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சகம் அன்லாக் 5.0 வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு தயாராக உள்ளது. அக்டோபர் நாட்டில் பண்டிகைகள் நிறைந்த காலம் என்பதால் மக்கள் அன்லாக் 5.0 வழிகாட்டுதல்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

ஐந்தாம் கட்ட அன்லாக் நடவடிக்கையில், கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளுடன் திரை அரங்குகள், அதாவது தியேட்டர்கள் மீண்டும் செயல்பட மத்திய உள்துறை அனைச்சகம் அனுமதிக்கும் என்று யூகங்கள் பரவி வருகின்றன.

அன்லாக் 4.0, அதாவது நான்காம் கட்ட அன்லாக் நடவடிக்கையின் கீழ் மால்கள், முடி திருத்தகங்கள், உணவகங்கள், ஜிம்கள் ஆகியவை கட்டுப்பாடுகளுடன் செயல்பட மத்திய அரசு ஏற்கனவே அனுமதித்துள்ள நிலையில், சினிமா அரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இன்னும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. 

திறந்தவெளி தியேட்டர்கள் செப்டம்பர் 21 முதல் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டன.

சில நாட்களுக்கு முன்பு, மேற்கு வங்கம் அக்டோபர் 1 முதல் மாநிலத்தில் சினிமா அரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது, ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், சமூக இடைவெளி விதிமுறைகளை பின்பற்றுதல், முகமூடிகள் அணிதல் மற்றும் முன்னெச்சரிக்கை நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

லாக்டவுன் காரணமாக சுற்றுலாத் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்தாம் கட்ட அன்லாக்கில், அதிகமான சுற்றுலா மையங்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் பார்வையாளர்களுக்கு திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மறவாதீர்கள்.. ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி நாள் செப்.30..!!!

அக்டோபர் 10 முதல் ஹோட்டல், ஹோம் ஸ்டே மற்றும் சுற்றுலா தொடர்பான பிற சேவைகளை தொடக்க  அனுமதிப்பதாக சிக்கிம் அரசு அறிவித்துள்ளது.

அக்டோபரில் சுற்றுலாத் துறையை மீண்டும் திறக்க கேரளா அரசாங்கமும் தயாராகி வருகிறது.  உத்தரகண்ட் அரசு சுற்றுலாப் பயணிகளுக்கான அனைத்து கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது. உத்தரகண்ட் அரசு வெளியிட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் படி, சுற்றுலாப் பயணிகள் கொரோனா வைரஸ் நெகடிவ் என்பதற்கான அறிக்கையை எடுத்துச் செல்வது இனி கட்டாயமில்லை என்று கூறியுள்ளது.
அக்டோபர் முதல் வாரத்திலிருந்து மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களுக்கு சென்று வாடிக்கையாளர்கள் உணவு அருந்தலாம் என்று மகாராஷ்டிரா அரசு திங்கள்கிழமை (செப்டம்பர் 28) அறிவித்தது.

நான்காம் கட்ட அன்லாக்கின் போது, செப்டம்பர் 7 முதல்  மெட்ரோ ரயில்களை மீண்டும் தொடங்க மத்திய அரசு அனுமதித்தது. செப்டம்பர் 21 முதல் 100 பேர் வரையிலான எண்ணிக்கையுடன், அரசியல், சமூக மற்றும் ஆன்மீக கூட்டங்கள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் படிக்க | youtube சானல் நேரலை சந்திப்பில், வதந்திகளை பரப்புபவர்களை கிழித்த SP Charan... !!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More