Home> Tamil Nadu
Advertisement

5 மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் அனல்காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழையின் காரணமாக ஐந்து மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கு என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

5 மாவட்டத்தை தவிர மற்ற மாவட்டங்களில் அனல்காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கன மழை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அதேபோல சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, கடலூர், பெரம்பலூரில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீசும் என்றும் மாலை நேரத்தில் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சாதாரணமாக இருக்கும் வெப்பநிலையை விட 2-3 செல்சியசுக்கு அதிகமான வெப்பநிலை நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருக்கும். எனவே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் அதிகமாக வெளியே செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொருத்த வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானில் நிலைமை ஓரளவுக்கு மேகமூட்டமாக (மாலை நேரத்தில்) இருக்கும். அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

Read More