Home> Tamil Nadu
Advertisement

வானிலை அறிவிப்பு: நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை மழையின் குறுக்கீடு இருக்குமா?

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட உள்ளது. வானிலை எப்படி இருக்கும்.

வானிலை அறிவிப்பு: நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை மழையின் குறுக்கீடு இருக்குமா?

தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை உலக முழுவதும் கொண்டாட உள்ளது.

இதனையடுத்து, நாளை தமிழகம் முழுவதும் வானிலை எப்படி இருக்கும் என்பதை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் என்ன கூறுகிறது என்பதை பார்போம். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறுத்தவரை மிதமான மழை இருக்கலாம். அதேபோல கடலோர மாவட்டங்களில் புயல் காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கும் வானிலை இப்படி தான் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்த வரை மிதமான மழை பெய்யலாம். அப்படி இல்லாதபட்சத்தில் வறண்ட வானிலை காணப்படும். சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி முதல் குறைந்தபட்சம் 23 டிகிரி வரை செல்சியஸ் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடலாம். மழையின் குறுக்கீடு இருக்காது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Read More