Home> Tamil Nadu
Advertisement

திமுகவை சீண்டிப் பார்க்கிறார்கள். IT மிரட்டலுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல: ஸ்டாலின்

வேலூரில் வருமான வரித்துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். இதுக்குறித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "எதற்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல" எனக் கூறியுள்ளார்.

திமுகவை சீண்டிப் பார்க்கிறார்கள். IT மிரட்டலுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல: ஸ்டாலின்

வேலூரில் வருமான வரித்துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அதுவும் குறிப்பகா திமுக கட்சியை சேர்ந்தவர்களை குறிவைத்து, இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதுக்குறித்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், "எதற்கும் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக கடந்த 29 ஆம் தேதி திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி இல்லத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சம் கணக்கில் வராத பணம் சிக்கியது எனக் கூறப்பட்டது. இன்றும் தொடர்ந்து வேலூரில் துரைமுருகன் மகன், ஆதரவாளர்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகிறது. அப்பொழுது சிமெண்ட் குடோனிலிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அக்கட்சியின் மக்களவை வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து அரக்கோணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசினார். அப்பொழுது அவர், அதிமுக மற்றும் பாமக கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய பேசினார். 

இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 

தமிழகத்தில் காலூன்ற முடியாததால், வருமான வரித்துறை - சி.பி.ஐயைக் கொண்டு அ.தி.மு.கவை மிரட்டி அடிபணிய வைத்தது பா.ஜ.க அரசு!

'இப்போது தேர்தலில் படுதோல்வி அடையப் போகிறோம்' என்கிற பயத்தால் தி.மு.கவை சீண்டிப் பார்க்கிறார்கள்.

உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல!

எனப் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

 

Read More