Home> Tamil Nadu
Advertisement

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிந்தது!

மேட்டூர் அணையின் நீர்வரத்து சரிந்தது!

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக அனைத்து அணைகளிலும் நீர்வரத்து சற்று கணிசமாக உயர்ந்து வந்தது. எனினும் தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் அணைகளின் நீர்வரத்தும் குறைந்து வருகிறது.
 
இந்நிலையில் நேற்று வரை மேட்டூர் அணைக்கு, 22 ஆயிரத்து 77 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில் தற்போது வினாடிக்கு 13 ஆயிரத்து 199 கன அடியாக சரிந்துள்ளது.

மேட்டுர் அணையின் நீர்மட்டம் 72.38 அடியாகவும், நீர் இருப்பு 34.77 டி.எம்.சி. யாகவும் இருகின்றது. எனவே அணையில் இருந்து விநாடிக்கு 700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Read More