Home> Tamil Nadu
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கனிசமாக குறைந்துள்ளது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 21,000-கன அடியாக குறைந்துள்ளது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கனிசமாக குறைந்துள்ளது!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 21,000-கன அடியாக குறைந்துள்ளது!

கடந்த சில வாரங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தின் காவிரிக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்து வந்தது. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவு 23,000 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 21,000 கனஅடி-யாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 104.07 அடியாக குறைந்துள்ளது. 

தற்போது அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறந்துவிடப்படும் நீரின் அளவு 13,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 700 கன அடியகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 70.21 டிஎம்சியாகவும், அணையினை நீர்மட்டம் 104.07 அடியாகவும் உள்ளது.

Read More