Home> Tamil Nadu
Advertisement

என் தலைமையில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை இருக்கிறது: சசிகலா

Tamil Nadu: அதிமுக தலைவர்கள் தொண்டர்களால்  தான் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை: சசிகலா

என் தலைமையில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை இருக்கிறது: சசிகலா

சென்னை தி.நகரில் அண்ணா தொழிற்சங்க தென் சென்னை மாவட்ட தலைவர் குணசேகரன் இல்ல திருமண விழாவை நடத்தி வைத்த சசிகலா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், பத்திரிகையாளர் மீது வழக்கு போடுவது தவறு என்று கூறினார். ‘அதிமுக தலைவர்கள் தொண்டர்களால்  தான் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால் அந்த நிலைமை தற்போது இல்லை. 

அதிமுகவில் தொண்டர்களில் ஒருவருக்கு  தான் ஜெயலலிதா மாநிலங்களவை சீட் கொடுத்து வந்தார். அது இப்போதும் தொடர வேண்டும். அதிமுக முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டுதான்  இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது.

அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்த்து பேசவில்லை. ஒரு சிலர் மட்டும் தான் பேசுகிறார்கள். அவர்கள் பதவிக்காக பேசலாம். என் தலைமையில் அதிமுக செயல்படும் என எனக்கு 100% நம்பிக்கை இருக்கிறது. தமிழகம் முழுவதும் ஆன்மீக பயணம் போன்று அரசியல் பயணமும் தொடரும். 

மேலும் படிக்க | வடமாநில கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

திமுக ஆட்சி எதுவும் செய்யவில்லை என மக்கள் சொல்கிறார்கள். தூர்வாருவதற்கு முன்பாகவே மேட்டூர் அணையை திறந்து உள்ளனர். தமிழகத்தில திமுக ஆட்சியில் பல இடங்களில் கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளன. திமுக ஆட்சியில் ஓராண்டில் குழுக்கள் அமைத்தது மட்டுமே சாதனை.

ஐஎஎஸ் அதிகாரிகள் 321 பேர் இருக்கும்போது தனியார் குழுக்களை வைத்து குழு அமைப்பது ஏன்? ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது தான் திமுகவின் ஓராண்டு பணி. ஏழை, எளிய மக்களுக்கு அம்மா மருந்தகம் பயன்பட்டது. அதனை நடத்த விட தடுப்பது சரியல்ல. இது போன்ற விசயங்களில் அரசியல் சாயம் பூச வேண்டாம்.

மேலும் மாநில அரசு மத்திய அரசை முறையாக அணுகி திட்டங்களை கேட்டுப்பெற வேண்டும். சண்டை போடக்கூடாது. பேரறிவாளன் விடுதலைக்கு விதை போட்டது ஜெயலலிதா தான். ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த அதிகாரி ஒருவரே பேரறிவாளன் குற்றவாளி இல்லை என சொல்லியிருக்கிறார். 

பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பாக முதல்வரும், நிதியமைச்சரும் முடிவு செய்ய வேண்டும் . நான் எதுவும் சொல்லவில்லை. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள் அவருக்காக கொண்டுவந்ததல்ல, அது மக்களுக்காக கொண்டு வரப்பட்டது என்பதை முதலமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று சசிகலா தெரிவித்தார். 

மேலும் படிக்க | மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை - வடமாநிலத்தவர்கள் வெறிச்செயலா ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More