Home> Tamil Nadu
Advertisement

அப்போ குட்கா பாஸ்கர்; இப்போ டெங்கு பாஸ்கர்: ஸ்டாலின்

குட்கா பாஸ்கர். இப்போ டெங்கு பாஸ்கரா மாறியிருக்கிறார். அவர் நயவஞ்சகத்தின் மறு உருவம்.

அப்போ குட்கா பாஸ்கர்; இப்போ டெங்கு பாஸ்கர்: ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வில்லிவாக்கம் ரயில் நிலையம் அருகே நடைபெறும் மேம்பால பணிகளை பார்வையிட்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர்:-

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதில் மக்களை காப்பாற்ற அரசு போதிய முன்னெச்சரிக்கையை எடுக்கவில்லை.

டெங்கு காய்ச்சலால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதை மறைக்க பலி எண்ணிக்கையை குறைத்து பொய்யான தகவலை தெரிவிக்கிறார்கள். இதனால் மத்திய குழு பார்வையிட வர வேண்டிய அவசியம் இல்லை.

ஏனென்றால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது எய்ம்ஸ் மருத்துவ குழு எந்த மருத்துவ அறிக்கையையும் தரவில்லையோ அதே போல் இப்போது வந்துள்ள குழுவும் ஒரு வேஸ்ட் ஆன குழுதான். டெங்கு காய்ச்சலுக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் பேட்டி கொடுத்து விட்டு செல்கிறார்கள்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்குவை கட்டுப்படுத்துவதை விட்டு விட்டு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் அரசு விழா நடத்துகிறார். 

அவர் விஜயபாஸ்கர் இல்லை. குட்கா பாஸ்கர். இப்போ டெங்கு பாஸ்கரா மாறியிருக்கிறார். அவர் நயவஞ்சகத்தின் மறு உருவம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Read More