Home> Tamil Nadu
Advertisement

சென்னை அருகே நாளை வர்தா புயல் கரையை கடக்கும்

சென்னைக்கு மிக அருகில் நாளை ‘வர்தா’ புயல் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை அருகே நாளை வர்தா புயல் கரையை கடக்கும்

சென்னை: சென்னைக்கு மிக அருகில் நாளை ‘வர்தா’ புயல் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள அதிதீவிர, ‛வர்தா' புயல் இன்று காலை, 5:30 மணி நிலவரப்படி சென்னையில் இருந்து, 450 கி.மீ., தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில், இன்று மாலை முதல் நாளை வரை பரவலாக மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். 

இந்த புயல் நாளை மதியம் சென்னை அருகே கரையை கடக்க கூடும். எனவே மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. 

Read More