Home> Tamil Nadu
Advertisement

ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பரமேஸ்வர விண்ணகரம் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் 83வது திவய் தேசமானதும்,திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும்,சேர சோழ பாண்டியர்களை வென்ற பல்லவன் வில்லவன் மல்லையர்கோன் முதலிய பல அரசர்களின் திருப்பணிகளை கொண்டதும், பரமேஸ்வர விண்ணகரம் என்று அழைக்கப்படும்
அருள்மிகு ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத ஸ்ரீ வைகுண்டப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க | பரோட்டா உண்ணும்போது வந்த விக்கல்... தொழிலாளி மரணம் - மருத்துவர்கள் கூறுவது என்ன?

இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில் இந்தாண்டு வைகாசி மாத பிரம்மோற்சவமானது இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. அதையொட்டி உறசவர் வைகுண்ட பெருமாளுக்கும்,கருடர் உருவம் பொறித்த கொடியிற்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று ஸ்ரீதேவி பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் கொடி மரம் அருகே உறசவர் வைகுண்ட பெருமாள் எழுந்தருளியதை தொடர்ந்து,மங்கள இசை வாத்தியங்கள் முழங்க,அதிர் வேட்டுகள் வெடி வெடிக்க,
கருடர் உருவம் பொறித்த கொடியானது கோவில் கொடி மரத்தில் ஏற்றப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.

இதனைதொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவியருடன் உற்சவர் வைகுண்ட பெருமான் கோவில் உட் பிரகாரத்தில் வலம் வந்தப்பின் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

10நாட்கள் நடைபெறும் இந்த வைகாசி பிரம்மோற்சவத்தில் அனுதினமும் காலை மாலை என இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வைகுண்ட பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதில் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவம் வருகிற 3ந் தேதியன்று அன்று காலையும்,வருகிற 7ந் தேதி காலை எடுப்புத் தேர் உற்சவமும் நடைபெறுகிறது.

இந்த பிரம்மோற்சவத்திற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்.

மேலும் படிக்க | சட்ட விராேதமாக தாய்ப்பால் விற்பனை! வணிக மையத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More