Home> Tamil Nadu
Advertisement

நமது நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில் உள்ளது -முதல்வர்

இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் 160 வது ஆண்டு நிறைவு வைர விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்.

நமது நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில் உள்ளது -முதல்வர்

இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் 160 வது ஆண்டு நிறைவு வைர விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உரையாற்றினார். அவர் கூறியதாவது,

இங்கு அமர்ந்திருக்கும் மாணவர்களை நினைத்தாலே பெருமையாக இருக்கிறது. மாணவர்கள் நினைத்தால் சமுதாயத்தை நன்றாக கட்டமைக்க முடியும். நமது நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில் தான் உள்ளது. மாணவர்கள் படிக்கும் போது கவனம் முழுவதும் கல்வியின் மேல் தான் இருக்க வேண்டும். அறிவுப் பூர்வமாக படித்து, இந்த சமுதாயத்திற்கு பல நன்மைகள் செய்ய வேண்டும். ஆனால் சிலர் புத்தகம் தூக்கும் கையில் ஆயுதங்களை தூக்கிக் கொண்டு செல்வது மிகவும் வேதனையாக உள்ளது. இதுபோன்ற செயல்களால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். இதுபோன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்களுக்கான வாய்ப்புகள் நாட்டில் நிறைய இருக்கின்றன. நன்றாக படித்தால் மாணவர்கள் வெற்றி பெறுவது உறுதி. நல்ல எதிர்காலம் உள்ளது. 

இந்த மாணவச் சமுதாயம் நாளைய இந்தியாவை, தமிழகத்தை ஆளக்கூடிய சமுதாயம். இளைஞர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கக்கூடிய வயது உங்களுடைய வயது. இந்த வயதில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டிய நிலையிலே நீங்கள் இருக்கின்றீர்கள். பிற்காலத்திலே உங்களுடைய வாழ்க்கை சிறக்க வேண்டுமென்று சொன்னால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இப்பொழுது விளையாட்டாக இருந்துவிட்டால், பின்னர் உங்கள் வாழ்க்கை இருள் சூழ்ந்த வாழ்க்கையாக அமைந்துவிடும். ஆகவே, கல்லூரிப் பருவம் என்பது கிடைத்தற்கரிய ஒரு பருவம். அந்தக் கல்லூரி வாழ்க்கையில்தான் ஒரு மாற்றம் ஏற்படும். பல்வேறு பிரிவினர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து படிக்கும்பொழுது பலருடைய நட்பு கிடைக்கின்றது. அவர்களுடைய அறிவு, பண்பு அத்தனையும் கிடைக்கின்றது. அத்தனையும் கிடைப்பதற்கு இந்தக் கல்லூரிதான் மையமாக விளைகின்றது என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். மனிதனாகப் பிறந்தால் ஒவ்வொருவரும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும். அப்படிப் கற்றால்தான் கல்லூரிப் படிப்பின் மூலம் அவர்களுடைய வாழ்க்கை சிறக்கும், செழிக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாம மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

Read More