Home> Tamil Nadu
Advertisement

நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக மனு ஒத்திவைப்பு

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முதல்வராக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்திருந்தது. 

நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக மனு ஒத்திவைப்பு

சென்னை: சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முதல்வராக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்திருந்தது. 

கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். இந்த, நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்தும், திமுக கட்சியின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, திமுக-வின் முறையீடு நேற்று அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று ஐகோர்ட்டில் கூறியிருந்தது. இந்நிலையில் நேற்று இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு இன்று (22-02-2017) விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கை வரும் பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தற்காலிக தலைமை நீதிபதி ரமேஷ், நீதிபதி மகாதேவன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்தனர். மேலும், சட்டசபை நிகழ்வுகள் தொடர்பான வீடியோ பதிவுகளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். 

Read More