Home> Tamil Nadu
Advertisement

நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! இன்று ஜெ., வீடியோ வெளியீடு! பின்னணி என்ன?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் வீடியோ வெளியிட்டுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! இன்று ஜெ., வீடியோ வெளியீடு! பின்னணி என்ன?

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அவர் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. இந்த விசாரணை கமிஷன் முன்பு டாக்டர்கள் உள்ளிட்ட பலர் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர். 

 

 

இந்நிலையில் இன்று சென்னை, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் வீடியோ ஒன்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், சென்னை தலைமை செயலகத்தில் வெளியிட்டுள்ளார். வெளியிட்ட சில நொடிகளில் இந்த வீடியோ தீயாக பரவி வருகிறது.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் வீடியோ வெளியிட்டுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read More