Home> Tamil Nadu
Advertisement

தக்காளி விலை மீண்டும் உயர்வு! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Tomato Price Today: தக்காளி விலையில் மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மொத்த வியாபார சந்தையில் கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தக்காளி விலை மீண்டும் உயர்வு! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

பருவமழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட அளவில் காய்கறிகள் வரவில்லை. ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரவேண்டிய தக்காளி வராததால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையிலேயே கிலோ ரூ.120க்கு விற்கப்படுகிறது எனில், சில்லறை கடைகளில் விலை ரூ.150ஆக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த விலையேற்றத்தின் காரணமாக மக்கள் மிகவும் அதிருப்தியடைந்துள்ளனர்.  மேலும், வரும் வாரங்களில் இரண்டு முகூர்த்த தினங்கள் இருப்பதால் தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பேசிய நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங், "ஆண்டின் 365 நாட்களிலும் தக்காளி விநியோகத்தை சீராக்குவதற்கான தீர்வைக் கண்டறிய மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

மேலும் படிக்க | அரசியல் காழ்புணர்ச்சி... எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும் - தங்கம் தென்னரசு!

fallbacks

இதை எப்படி பாதுகாப்பாக சேமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் மாணவர்களிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன. அடுத்த 15 நாட்களில் தக்காளி விலை குறைந்துவிடும். அடுத்த ஒரு மாதத்தில் விலை இயல்பை எட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தமிழக அரசின் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடையை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் வழக்கமான கொள்முதலை விட 15% அதிகமாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தக்காளி விலை உயர்வு மக்களை பாதிக்கும் என்பதால் விலையை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் கூறினார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் உள்ள 62 மையங்களில் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்பனை நடந்து வருகிறது. 3 முதல் 4 நாட்களில் தக்காளி விலை முழுமையாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் தொடர் நடவடிக்கையால் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. தேவைக்கு ஏற்ப வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காய்கறி விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால் நியாய விலைக்கடைகளில் கூட குறைந்த விலையில் காய்கறிகளை விற்க தயாராக உள்ளோம்." என அவர் கூறினார்.

மேலும் படிக்க | சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கல்லறை! நீதிபதி அதிரடி உத்தரவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More