Home> Tamil Nadu
Advertisement

தமிழகத்தில் 42,76,640 பேருக்கு கொரோனா சோதனை!! இன்று 5,980 பேர் பாதிப்பு

இன்று 70,023 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல இதுவரை தமிழகத்தில் 42,76,640 பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 42,76,640 பேருக்கு கொரோனா சோதனை!! இன்று 5,980 பேர் பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 5,980 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,278 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 126,677 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 97 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் இன்று 6,129 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 3,25,456 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 3,85,352 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 6,614 ஆக உயர்ந்தது. 

இன்று 70,023 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதேபோல இதுவரை தமிழகத்தில் 42,76,640 பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது.

இன்றைய நிலவரம்: 24-08-2020

கொரோனா பாதிப்பு - 5,967 
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 53,282
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 70,023
இன்று குணமடைந்து வெளியேறியவர்கள் - 6,129 
இறப்பு - 97 

fallbacks

Read More