Home> Tamil Nadu
Advertisement

சுர்ஜித் குரலை கேட்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது: அமைச்சர் சி விஜயபாஸ்கர்

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ள குழந்தைக்கு அதிகபட்ச ஆக்ஸிஜனை வழங்க முயற்சிக்கிறோம்.  மீட்புக் குழுக்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என தமிழக அமைச்சர் சி விஜயபாஸ்கர்.

சுர்ஜித் குரலை கேட்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது: அமைச்சர் சி விஜயபாஸ்கர்

திருச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சுர்ஜித்தை வெளியே எடுக்க 19 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை குறித்து ஆய்வு செய்து வரும் தமிழக அமைச்சர் சி விஜயபாஸ்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்பொழுது அவர், ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துள்ள குழந்தைக்கு அதிகபட்ச ஆக்ஸிஜனை வழங்க முயற்சிக்கிறோம். அவரை எப்படியாவது மீட்க வேண்டும் என்ற முயற்சிகள் இருந்தபோதிலும், அவரைத் மேலே இதுவரை கொண்டுவர முடியவில்லை. இன்று காலையிலிருந்து அவரது குரலை கேட்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது. மீட்புக் குழுக்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் எனக் கூறியுள்ளார். 

 

தற்போது ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தையிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால், அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. குழந்தை ஒருவேளை மயக்கம் அடைந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குழந்தையை மீட்டவுடன், தொடர்ந்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் தவறுதலாக தவறி விழுந்தார். அப்பொழுது முதல் தற்போது வரை 19 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.

Read More