Home> Tamil Nadu
Advertisement

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; ஆன்லைனில் எவ்வாறு பார்ப்பது

இன்று காலை 11 மணி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு; ஆன்லைனில் எவ்வாறு பார்ப்பது

சென்னை: இன்று காலை 11 மணி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மதிப்பெண் சான்றிதழ்களை 22 ஆம் தேதி காலை 11 மணி முதல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மே மாதம் பிளஸ்-2 (12th Exam Results) பொதுத்தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று அச்சம் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி எனவும் தமிழக அரசு (TN Govt) அறிவித்தது. இந்த அடிப்படையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்றதால் இன்று காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. 

ALSO READ | தமிழ்நாட்டில் +2 மார்க் எப்பொழுது வெளியிடப்படும்? மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவு

தேர்வு மதிபெண்களை எவ்வாறு பார்ப்பது

* www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
* பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று இணைத்தளம் வழியாக அறிந்துக்கொள்ளலாம். 
* பள்ளியில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு குறிஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

இதனையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் எப்படி கணக்கீடு செய்யப்படும் என பலரின் கேள்வியாக இருந்தது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் மதிப்பெண் வழங்குவது குறித்து தெளிவுப்படுத்தப்பட்டது. 

மதிப்பெண் கணக்கீடு முறை: 

- 10 வகுப்பு மதிப்பெண்ணில் 50%, 11 ஆம் வகுப்பு மதிப்பெண் 20% மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு 30% எடுத்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
- 11 ஆம் வகுப்பில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கும், தோல்வியுற்ற மாணவர்களுக்கும் அந்த தேர்வுகளில் 35 மதிப்பெண்கள் வழங்கப்படும். 
- 12 ஆம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு 20, அக மதிப்பீடு 10 என 30% கணக்கிடப்படும்.

முன்னதாக ஜூலை 31 ஆம் தேதிக்குள் பிளஸ் 2 மதிப்பெண் குறித்து விவரங்கள் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை (TN School) அறிவித்துள்ளது.

ALSO READ | தனியார் பள்ளிகள் 75% கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும்: அரசு உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More