Home> Tamil Nadu
Advertisement

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு - தமிழக அரசு உத்தரவு

கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ள தமிழக அரசு, ஜனவரி 1 அன்று கடற்கரைகளுக்கு செல்ல தடை விதித்துள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு - தமிழக அரசு உத்தரவு

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், ஒமிக்ரான் வைரஸூக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் விலக்குகள் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | ஈஷா விவகாரத்தில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதா? எஸ்.டி.பி.ஐ கேள்வி

இதனால், சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும். புத்தாண்டு கொண்டாடத்துக்காக டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி கடற்கரைகளில் கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதேநேரத்தில் நீச்சல் குளங்கள், அனுமதி கொடுக்கப்பட்ட கூட்ட அரங்குகளுக்கான அனுமதி தொடரும். 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான பள்ளிக்கூடம் நாள்தோறும் நடைபெறும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, கல்லூரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்களும் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது.

ALSO READ | "மாரிதாஸ் வாழ்க" என நெற்றியில் எழுதிக்கொண்டு வந்த நபர் - காவல்துறை விசாரணை

கடைகளில் சானிட்டைசர் கட்டாயமாக வைக்க அறிவுறுத்தியுள்ள தமிழக அரசு, உடல் வெப்பநிலை கருவிகளைக் கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. கடைகளுக்கு குளிர்சாதன வசதிகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. வாடிக்கையாளர்கள் முகக்கவசம் இல்லாமல் வந்தால் அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. இவை தவிர ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சமூக இடைவெளி முகக்கவசம் அணிவது ஆகியவற்றை கடைபிடிக்குமாறு தமிழக அரசு பொதுமக்கள் அறிவுறுத்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More