Home> Tamil Nadu
Advertisement

கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆளுநர் ஆய்வு செய்வதில் தவறில்லை: தமிழக முதல்வர்

மீண்டும் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஆளுநர் ஆய்வு செய்வதில் தவறில்லை: தமிழக முதல்வர்

நேற்று மாலை டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு இல்லத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து இன்று காலை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டு காலை 9.45 மணியளவில் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் பாதிப்பால், தமிழகத்திற்கு நிவாரண நிதியாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அதில் 1500 கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேலும் புயல் சேதங்களை மதிப்பிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவை விரைந்து தமிழகம் அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி உள்ளேன் எனக் கூறினார்.

இந்நிலையில், இன்று மாலை மீண்டும் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவினர் நாளை தமிழகம் வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து ஆலோசனை செய்து பின்னர் எந்ததெந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்யப்படும். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆளுநர் ஆய்வு செய்வது வரவேற்க்கதக்கது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவகையில் நன்மை கிடைத்தாலும் நல்லது தான்.

அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். மக்களுக்கு நிவாரணம் போய் சேர வேண்டும் என்பது தான் அரசின் திட்டம். கஜா புயல் பாதிப்புகள் குறித்து விளக்கம் தெரிவித்ததோடு, அதுக்குறித்து அறிக்கையும் பிரதமரிடம் கொடுத்தேன். அந்த அறிக்கையை பார்த்த பிறகு தான், மத்திய குழுவை பிரதமர் அனுப்பி வைக்கிறார்.

இவ்வாறு டெல்லி செய்தியாளர்களை சந்திபில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Read More