Home> Tamil Nadu
Advertisement

ஊழல் குற்றச்சாட்டுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக தான்: முதல்வர் அட்டாக்

இந்திய வரலாற்றிலேயே ஊழல் குற்றச்சாட்டுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக தான் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக தான்: முதல்வர் அட்டாக்

தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் 97 தொகுதிகளுக்கு மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதிக்களுக்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 அன்று தொடங்கி நேற்றுடன் முடிந்தது. நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது. கட்சியின் முக்கிய தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அந்த வகையில் நேற்று தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் மற்றும் மத்திய சென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம் பால் ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்க்கொண்டார் முதல்வர்.

அப்பொழுது பேசிய அவர், நாட்டில் பலமுறை மக்களவை தேர்தலை நாம் சந்தித்து இருக்கிறோம். ஆனால் இந்தமுறை நடைபெறும் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். இது இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய நடத்தப்படுகிற தேர்தல் ஆகும். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் வலிமைமிக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான். எனவே பிரதமர் மோடி அவர்களை ஆதரித்து, அவரை மீண்டும் பிரதமராக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு உள்ளார்.

அதிமுக-வை ஊழல் கட்சி என்று கூறிவரும் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் இந்திய வரலாற்றிலேயே ஊழல் குற்றச்சாட்டுக்காக கலைக்கப்பட்ட ஒரே கட்சி திமுக தான். 40-க்கு 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெரும் எனவும் அவர் பேசினார்.

Read More