Home> Tamil Nadu
Advertisement

TN Budget 2021-22: PTR பட்ஜெடட்டில் எந்த துறைக்கு எவ்வளவு ஓதிக்கீடு

தமிழக பட்ஜெட் 2021-2022-ஐ நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். 

TN Budget 2021-22: PTR பட்ஜெடட்டில் எந்த துறைக்கு எவ்வளவு ஓதிக்கீடு

TN Budget 2021: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கி நடைபெற்றது.

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் (PTR Palanivel Thiyagarajan) பொது பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் (Tamil Nadu Budget) பல துறைக்கு சிறப்பான ஓதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம்.

* தமிழகத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுகளுக்கு ரூ.5கோடி நிதி ஒதுக்கப்படும்
* நீதித்துறைக்கு ரூ. 1713 கோடி ஒதுக்கீடு; பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ. 1,360 கோடி ஒதுக்கீடு
* தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ. 80 கோடி, தொல்லியல் துறைக்கு ரூ. 29 கோடி ஒதுக்கீடு
* காவல்துறைக்கு ரூ. 8,930.29 கோடி; சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ரூ. 4,807 கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழ்நாடு முழுவதும் பாசன வசதியை மேம்படுத்த ரூ. 6,607 கோடி நிதி ஒதுக்கீடு
* மீன்வளத்துறைக்கு ரூ. 1149 கோடி ஒதுக்கீடு
* உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369.09 கோடி நிதி ஒதுக்கீடு

ALSO READ | TN Budget LIVE: தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது: நிதியமைச்சர்

* சென்னையில் 3 இடங்களில் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு 2,056 கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழக அரசின் பட்ஜெட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி நிதி ஒதுக்கீடு
* மகளிர் இலவச பயணத்திற்கு மானியமாக நிதி ஒதுக்கீடு ரூ.703 கோடி நிதி ஒதுக்கீடு
* குளங்களை தூர்வார ரூ.111.24 கோடி ஒதுக்கீடு
* தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்துக்கு 3,954.44 கோடி நிதி ஒதுக்கீடு
* 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்குதளங்கள் அமைக்கப்படும் இதற்காக ரூ. 433 கோடி ஒதுக்கீடு
* தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ. 3,954 கோடி ஒதுக்கீடு
* 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ. 623.59 கோடி ஒதுக்கீடு
* போக்குவரத்துக் கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.750கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழ்நாட்டுக்கு தனித்துவமான கல்விக்கொள்கை உருவாக்கப்படும்; தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 32,599.54 கோடி நிதி ஒதுக்கீடு
* தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ. 5கோடி ஒதுக்கீடு
* சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500கோடி நிதி ஒதுக்கீடு
* ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு
* ஜல்ஜீவன் இயக்கம் மூலம் வீட்டுக்குடிநீர் இணைப்பு திட்டத்திற்கு 2,000 கோடி நிதி ஒதுக்கீடு
* அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்காக ரூ.1,200  கோடி ஒதுக்கீடு
* கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2,350 கோடி நிதி ஒதுக்கீடு
* கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் வடிகாலுக்கு ரூ.87 கோடி நிதி ஒதுக்கீடு
* சென்னையில் 3 இடங்களில் புதிய மேம்பாலங்கள் கட்ட ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
* வேளாண்மைக்கான இலவச மின்சாரம், வீட்டு மின்சார மானியத்திற்காக ரூ.19,872.77 கோடி நிதி ஒதுக்கீடு
* இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.490.27 கோடி நிதி ஒதுக்கீடு
* இலவச பள்ளிச்சீருடைகள் விநியோகத்திட்டத்திற்கு ரூ.409.30 கோடி நிதி ஒதுக்கீடு
* மொத்த வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் 77.88% கல்வி தொடர்பான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
* பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ரூ.32,599.54 கோடிநிதி ஒதுக்கீடு
* 25 கலை, அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க ரூ.10கோடி நிதி ஒதுக்கீடு
* மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறைக்கு மொத்தம் ரூ.18,933.20 கோடி நிதி ஒதுக்கீடு
* தமிழ்நாடு சித்தா பல்கலைகழகம் அமைக்க முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு
* முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,046.09 கோடி நிதி ஒதுக்கீடு
* டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி ஒதுக்கீடு
* அமைப்புச்சாரா தொழிலாளர் நலவாரியத்திற்கு மானியம் வழங்க ரூ.215.64 கோடி நிதி ஒதுக்கீடு
* சுற்றுலாத்துறைக்கு ரூ.187.59 கோடிநிதி ஒதுக்கீடு
* 3ம் பாலினத்தவர்களுக்கான ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
* அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த ரூ.48.48 கோடி ஒதுக்கீடு
* புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.1,725.41 கோடி ஒதுக்கீடு
* ஆதி திராவிடர், பழங்குடியினர் நலனுக்காக ரூ.4,142.33 கோடி ஒதுக்கீடு
* மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு
* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக ரூ.225.62 கோடி ஒதுக்கீடு

ALSO READ | TN Budget 2021: தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்- நிதியமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More