Home> Tamil Nadu
Advertisement

TN Budget 2021: காவல் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 14,317 பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 

TN Budget 2021: காவல் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு!

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று காலை 10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக நிதிதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட் உரையை தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்று வருகின்றன. மேலும் அனைத்து துறைகளுக்கும் கூடுதல் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக காவல்துறைக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழக காவல்துறையில் (Tamil Nadu Police) காலியாக உள்ள 14,317 பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காவல்துறைக்கு ரூ 8,930.29 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் (PTR Palanivel Thiyagarajan). அத்துடன் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு 405.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ | TN Budget 2021 Update: 1921 ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினி மயமமாக்கப்படும்

2019 - 2020 தமிழக பட்ஜெட் மதிப்பீட்டில், காவல்துறைக்கு ரூ .8,084.80 கோடி ஒதுக்கப்பட்டது. ரூ .111.57 கோடி காவல்துறையின் நவீனமயமாக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது திமுகவின் பட்ஜெட்டில் காவல் துறைக்கு கூடுதலாக 900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் சில சிறப்பம்சங்கள்: 

* காவல்துறைக்கு ரூ. 8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு.
* சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு ரூ. 4,807 கோடி நிதி ஒதுக்கீடு
* நீதித்துறைக்கு ரூ. 1713 கோடி ஒதுக்கீடு
* பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ. 1,360 கோடி ஒதுக்கீடு.
* தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ. 80 கோடி ஒதுக்கீடு.
* தொல்லியல் துறைக்கு ரூ. 29 கோடி ஒதுக்கீடு.

சமீபத்தில் தமிழக காவல் துறையின் புதிய தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்ட சைலேந்திர பாபு பல்வேறு முக்கிய புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவிலேயே முதல் முறையாக காவல்துறையினருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் பிறந்தநாள் மற்றும் அவர்களது திருமண நாள் போன்ற தினங்களில் விடுப்பு அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். தற்போது காவல் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது மேலும் பல புதிய திட்டங்களை காவல்துறையினருக்கு அறிமுகப்படுத்த வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | TN Budget 2021: தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவோம்- நிதியமைச்சர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More