Home> Tamil Nadu
Advertisement

Tirunelveli Lok Sabha Election Result 2024: திருநெல்வேலி மக்களவைத் தொகுதி லேட்டஸ்ட் அப்டேட்

Tirunelveli Tamil Nadu Lok Sabha Election Result 2024: லோக்சபா 2024 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக, காங்கிரஸ் நேரடியாக மோதிய தொகுதி. இந்த தொகுதியில் காங்கிரஸின் கை ஓங்குகிறது.

Tirunelveli Lok Sabha Election Result 2024: திருநெல்வேலி மக்களவைத் தொகுதி லேட்டஸ்ட் அப்டேட்

Tirunelveli Tamil Nadu Lok Sabha Election Result 2024: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் நேரடியாக களம் கண்ட முக்கிய தொகுதி திருநெல்வேலி. காங்கிரஸ், பாஜக நேரடியாக மோதிய தொகுதி. காங்கிரஸ் கட்சியில் ராபர்ட் ப்ரூஸ், பாஜகவில் இப்போது எம்எல்ஏவாக இருக்கும் நயினார் நாகேந்திரன் வேட்பாளர்களாக களமிறங்கி அனல் பறக்கும் பிரச்சாரத்தை செய்தனர். இம்முறை மத்தியில் ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கில் இருக்கும் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தாலும், பாஜகவுக்கு இணையாக பிரச்சாரத்தை துடிப்புடன் செய்தனர். அதனை திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் களத்திலும் பார்க்க முடிந்தது. இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை பார்க்கலாம். 

திருநெல்வேலி லோக்சபா தேர்தலில் இருக்கும் சட்டமன்ற தொகுதிகள்

ஆலங்குளம், 
திருநெல்வேலி, 
அம்பாசமுத்திரம், 
பாளையம்கோட்டை, 
நான்குநேரி, 
இராதாபுரம்,

மேலும் படிக்க | EVM வாக்கு எண்ணிக்கை... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள்..!!

திருநெல்வேலி வாக்காளர்கள் எண்ணிக்கை
 
மொத்த வாக்காளர்கள்   :16,54,503           
ஆண் வாக்காளர்கள்       : 8,08,127             
பெண் வாக்காளர்கள்      :8,46,225             
மூன்றாம் பாலினத்தவர் :151   

 

திருநெல்வேலி தொகுதியின் 2019 நிலவரம்.
 
வெற்றி பெற்றவர் - ஞானதிரவியம் திமுக
பெற்ற வாக்குகள் - 522623
 
இரண்டாம் இடம் -மனோஜ் பாண்டியன் அதிமுக
பெற்ற வாக்குகள் - 337166
 
மூன்றாம் இடம் - மைக்கேல் ராயப்பன் அமமுக
பெற்ற வாக்குகள் - 62209 
 
திருநெல்வேலி தொகுதியின் 2024 வேட்பாளர்கள்
 
திமுக - ராபர்ட் ப்ரூஸ் (காங்கிரஸ்)
அதிமுக - ஜான்சி ராணி
பாஜக - நயினார் நாகேந்திரன்
நாதக - பா. சத்யா
 
திருநெல்வேலி தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
 
திருநெல்வேலி தொகுதி திமுக போட்டியிடும் தொகுதி என்றாலும், இம்முறை உட்கட்சி பூசல் காரணமாக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்த கட்சிக்கும் நல்ல செல்வாக்கு இருக்கும் தொகுதி தான் இது. இருப்பினும், இந்த தொகுதியின் வேட்பாளர் அறிவிப்பதில் காங்கிரஸ் கட்சியில் தாமதம் ஏற்பட்டது. ஏனென்றால், முன்னணி நிர்வாகிகள் பலர் போட்டியிட விரும்பியதால் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. கடைசியாக ராபர்ட் ப்ரூஸ் அறிவிக்கப்பட்டார். பாஜகவில் இப்படியான குழப்பம் ஏதும் இல்லாமல் தற்போதைய எம்எல்ஏ நயினார் நாகேந்திரனே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக போட்டி ஏற்பட்டாலும், திமுகவின் உதவியுடன் கை ஓங்கியது. இது தேர்தல் ரிசல்டிலும் எதிரொலிக்கும் என்பதுதான் இப்போதைய நிலவரம்.
 

மேலும் படிக்க | அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபார வெற்றி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More