Home> Tamil Nadu
Advertisement

இன்ஸ்டாகிராமில் விரிக்கப்பட்ட வலை... 75,000 ரூபாயை பறி கொடுத்த இளைஞர்..!!

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் கப்பலில் வேலை என கூறி, போலி நியமன ஆணைகளை வழங்கி தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.75,000 பணம் மோசடி  நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராமில் விரிக்கப்பட்ட வலை...  75,000 ரூபாயை பறி கொடுத்த இளைஞர்..!!

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியை சார்ந்த  பிரிசிலன் (22), இவர் கப்பல் வேலைக்கு படித்த நிலையில், வேலை தேடிக்கொண்டிருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மொபைலில் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் கப்பலுக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து அதில் உள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு விபரம் கேட்டுள்ளார். பின்னர் அதில் விளம்பரம் கொடுத்தவர் மீண்டும் இவரை தொடர்பு கொண்டு தற்போது கோவாவில் கப்பல் நிற்கிறது. தங்களுக்குரிய ஆவணங்களை அனுப்பும் படி கூறியதை தொடர்ந்து அதை நம்பி இவரும் அனுப்பியுள்ளார்.

எல்லாம் சரிபார்த்து விட்டு எனக்கு அந்த கம்பெனியின் அப்ரூவல் கடிதத்தையும், பணி நியமன கடிதமும் இ-மெயிலில் அனுப்பினார். அதை வைத்து எனது உறவினர் மூலம் விசாரித்ததில் அந்த கம்பெனியின் கப்பல் கோவாவில் (Goa) நிற்பது என்பதை பிரிசிலன் தெரிந்து கொண்டுள்ளார். பின்னர் தொடர்ந்து அந்த நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரூ.75 ஆயிரம் பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். 

இதை தொடர்ந்து அனைத்தும் சரியாக உள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் 05.06.2024 அன்று முதற்க்கட்டமாக முத்துகுட்டி சந்தானம் என்ற பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் GPay மூலம் என மொத்தம் ரூ.75 ஆயிரம் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் கம்பெனியில் விசாரித்த போது தான். அவை அனைத்தும் போலி என்பதும் தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்தது. 

fallbacks

மேலும் படிக்க |  ஏடிஎம் இயந்திரத்தில் இப்படியொரு நூதன திருட்டா... 15 வயது சிறுவனின் 'பலே திட்டம்'

மேற்படி நபரின் செல் நம்பரில் தொடர்பு கொண்ட போது அவை (8890878369, 8218437326) சுவிட்ச்ஆப் செய்யப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரிசிலன் வட்டிக்கு கடன் வாங்கி வேலைக்காக கட்டிய பணம் ஏமாற்றப்பட்டதை அறிந்து தன்னை போல் பலரை அந்த நபர் ஏமாற்றியிருப்பார் என்பதாலும், இதைப் போன்று மற்றவர்களும் ஏமாறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மேற்படி நபரை கண்டுபிடித்து பணத்தை மீட்டுத் தருமாறு கோரி தூத்துக்குடி மாவட்ட காவல்கண்பாளரிடம் இன்று மனு அளித்தார்.

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் கப்பலில் வேலை என கூறி, போலி நியமன ஆணைகளை வழங்கி தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.75,000 பணம் மோசடி  நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

fallbacks

மேலும் படிக்க | கார் ஓட்டி பழகும்போது நடந்த விபரீதம்... இரு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More