Home> Tamil Nadu
Advertisement

Video: உடைந்தது கோரம்பள்ளம் குளம்... தூத்துக்குடியை நோக்கி ஓடிவரும் வெள்ளம்!

Thoothukudi Rain Update: தூத்துக்குடி அருகே உள்ள பிரதான கோரம்பள்ளம் குளம் உடைந்துள்ளதாகவும், இதனால் நகர் பகுதிகளில் வெள்ளம் சூழ உள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. 

Video: உடைந்தது கோரம்பள்ளம் குளம்... தூத்துக்குடியை நோக்கி ஓடிவரும் வெள்ளம்!

Thoothukudi Rain Update: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் (டிச. 16) சாரலாக பெய்யத் தொடங்கிய மழை, நேற்று கனமழையாக மாறியது.   தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் சுமார் 950 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. 

தொடர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் (மழை அளவு மி.மீட்டரில்), திருச்செந்தூரில் 689, ஸ்ரீவைகுண்டம் - 622, மூலைக்கரைப்பட்டி - 615, மாஞ்சோலை - 552, கோவில்பட்டி - 525, குண்டர் அணை - 514, ஊத்து - 497, சாத்தான்குளம் - 471, நாலுமூக்கு - 469, பாளையங்கோட்டை - 442,  அம்பாசமுத்திரம் - 430,  மணியாச்சி - 417 என பதிவாகி உள்ளது. 

இந்நிலையில், திருநெல்வேலி - தூத்துக்குடி எல்லைப் பகுதியான செய்துங்கநல்லூர் அருகே உள்ள அய்யனார் குளம் பட்டியில் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துள்ளது. அந்த ஊரில் மேடான பகுதியில் அமைந்துள்ள வண்டிமலைச்சி - வண்டிமலையான் திருக்கோயில் உள்ளேயும் மழைநீர் உட்புகுந்துள்ளது.  இதற்கு முந்தைய ஆண்டுகளில் பெய்த மழையானது, அவ்வூரில் உள்ள ஓடை வழியாக சென்று செய்துங்கநல்லூரில் உள்ள வாய்க்காலில் கலந்துவிடும். 

மேலும் படிக்க | இந்த 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... மழை நிக்கவே வாய்ப்பில்லை - பாதிப்பு எப்படி இருக்கும்?

ஆனால், தற்போதைய சூழலில் வரலாறு கண்டிராத மழைபொழிவுதான் இதற்கு காரணம் என்கின்றனர், அப்பகுதிவாசிகள். மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாய்க்காலில் செல்லும் நீரானது, ஓடை வழியாக ஊருக்குள் நுழைந்துள்ளது. மேலும் மணிமுத்தாறு அணைகட்டு வழிதடங்களில் உள்ள சுமார் 80க்கும் மேற்பட்ட குளங்கள் பெருகி உள்ளது. 

அந்த குளங்களில் உள்ள தண்ணீரெல்லாம் மறுகால் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. வெளியேற்றப்பட்ட நீரெல்லாம் செல்ல இடமில்லாமல் ஊருக்குள் புகுந்துள்ளது. இதில் ஶ்ரீவைகுண்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள புதுக்குடி, கோவில்பத்து, நாட்டார்குளம், அய்யனார்குளம்பட்டி, கீழப்பட்டி, கொடிகுளம், சீதாங்குளம் ஆகிய கிராமங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வழியில்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. இக்கனமழையால் தினக்கூலிக்கு செல்லும் கிராம மக்கள் வாழ்வாரத்தை இழந்து தவிக்கின்றனர். 

மேலும் இக்கனமழையால் திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் பேருந்துகளும், திருநெல்வேலி - தூத்துக்குடி செல்லும் பேருந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூரில் இருந்து வெளியூருக்கும் வெளியூரில் இருந்து வரும் மக்கள் உள்ளூருக்கும் வரஇயலாமல் திருநெல்வேலி, தூத்துக்குடி, பாளையங்கோட்டை போன்ற பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

மேலும் சாலைகளெல்லாம் மழைநீரில் மூழ்கியிருப்பதால் முற்றிலுமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல வழி ஏதுமின்றி, அப்பகுதிக்கு செய்தியாளர்களும் செய்தி சேகரிக்க இயலாமல் உள்ளனர். ஏனெனில், மூன்று தலைமுறைகள் கண்டிராத மழைபொழிவை தூத்துக்குடி - திருநெல்வேலி மாவட்ட மக்கள் கண்டிருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர், அதாவது சுமார் 90 ஆண்டுகளுக்கு முன் பெய்த மழை என தகவல் அளிக்கப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது தூத்துக்குடியின் பிரதான கோரம்பள்ளம் குளம், சுமார் 2000 ஏக்கர் விளை நிலங்கள் பாதிப்படைந்துள்ளது. வீரநாயக்கன்பட்டி, முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூலும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி நகர்ப்பகுதியை நோக்கி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது, தாமிரபரணியில் 1 லட்சம் கன அடிக்கு மேல் வெள்ளம் ஓடுகிறது. 

மேலும் படிக்க | தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... ஒரே நாளில் ஒரு ஆண்டுக்கான மழை - எங்கு அதிகம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More