Home> Tamil Nadu
Advertisement

தேர்தல் 2024: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வரலாறு

Tamil Nadu Thoothukkudi Parliamentary Constituency History:  2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவான தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தேர்தல் 2024: தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வரலாறு

Thoothukkudi Lok Sabha Constituency Full Details: தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதியாகும். 2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு உருவானது தான் இது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி விவரம்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் கீழ் தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், ஒட்டபிடாரம் (தனி), விளாத்திகுளம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு 2009 ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தல் நடந்து வருகிறது. 2009 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.ஜெயதுரை வெற்றி பெற்றார். அதன்பிறகு 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜே.ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி வெற்றி பெற்றார். கடந்த முறை கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார். மூன்று மக்களவைத் தேர்தலில் இரண்டு முறை திமுகவும், ஒருமுறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

மேலும் படிக்க - தேர்தல் 2024: மத்திய சென்னை மக்களவைத் தொகுதி வரலாறு

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளர்கள் எண்ணிக்கை நிலவரம்

- மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,48,159
- ஆண் வாக்காளர்கள்: 7,08,234
- பெண் வாக்காளர்கள்: 7,39,710
- மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 215

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் உள்ள சட்டமன்ற தொகுதிகள் நிலவரம்

- தூத்துக்குடி
- திருச்செந்தூர்
- கோவில்பட்டி
- ஸ்ரீவைகுண்டம்
- ஒட்டபிடாரம் (தனி)
- விளாத்திகுளம்

மேலும் படிக்க - தேர்தல் 2024: வட சென்னை மக்களவைத் தொகுதி வரலாறு

2024 லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்

திராவிட முன்னேற்றக் கழகம் - கனிமொழி கருணாநிதி
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - சிவசாமி வேலுமணி
தமிழ் மாநில காங்கிரஸ் - விஜயசீலன் 
நாம் தமிழர் கட்சி - ரோவினா ரூத் ஜென்

2019 மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி வெற்றி நிலவரம்

2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 71.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி 563,143 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 215,934 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் இரண்டாம் இடம் பிடித்தார். அதற்கு அடுத்த இடத்தில் அமமுக வேட்பாளர் எம்.புவனேஸ்வரன் வேட்பாளர் 76,866 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் எஸ்.கிறிஸ்டன்டைன் ராஜசேகர் 49,222 வாக்குகளும், மக்கள் நீதி மையம் வேட்பாளர் டி.பி.எஸ்.பொன் குமரன் 25,702 வாக்குகளும், பெற்றனர். 

மேலும் படிக்க - தேர்தல் 2024: தென் சென்னை மக்களவைத் தொகுதி வரலாறு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More