Home> Tamil Nadu
Advertisement

ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டால் உணவுப் பொருள் இல்லை

ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டால் உணவுப் பொருள் இல்லை

நாளை முதல் ஸ்மார்ட் கார்டுகள் முலம் உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்று நுகர்வோர் பாதுகாப்பு துறை கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் ஒரு கோடியே 42 லட்சத்து 15 ஆயிரத்து 382 குடும்பங்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. எனவே ஸ்மார்ட் கார்டுகள் மூலம் உணவுப்பொருட்கள் நியாயவிலைக் கடைகளிலும் நாளை முதல் ஸ்மார்ட் கார்டுகள் மூலம் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும்  என தமிழக அரசு அறிவித்துள்ளன. 

மேலும் ஸ்மார்ட் கார்டுகள் இல்லாதவர்களுக்கு உடனடியாக ஸ்மார்ட் கார்டு அச்சிட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

நாளை முதல் தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கும் அனைத்து நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் கார்ட்கள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் எனவும், மின்னனு குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More