Home> Tamil Nadu
Advertisement

நாளை முதல் மெரினா பீச்சிற்கு மக்கள் செல்லலாம்: தமிழக அரசு அனுமதி

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு மெரினா கடற்கரை கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.

நாளை முதல் மெரினா பீச்சிற்கு மக்கள் செல்லலாம்: தமிழக அரசு அனுமதி

கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு மெரினா கடற்கரை கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி முதல் மூடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்கு பிற வெளியான இந்த அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது எனலாம். 

எனினும், கொரோனா (Corona) பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பதால், மெரினா பீச்சிற்கு வரும் பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் (Chennai) உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் மிக முக்கியமானதும், அனைவருக்கும் பிடித்தமான இடம் என்றால் அது மெரினா கடற்கரை தான். மெரீனா கடற்கரை, அங்கே கடைகள் வைத்திருக்கும் பலருக்கு வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது. 

கடற்கரைக்கு மக்கள் வர அனுமதி அளித்துள்ள போதிலும், அங்கே செயல்படும் கடைகளை முழுமையாக அனுமதிப்பதா என்பது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

லாக்டவுனிற்கு (Lockdown) பிறகு, முதல் கட்ட அன்லாக் தொடங்கி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் வருவதற்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை.

மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகளும் மெரினா கடற்கரையை ஏன் தொடர்ந்து மூடி  வைத்திருப்பது குறித்த காரணம் கூறுமாறு சென்னை மாநகராட்சியிடம் கேட்டனர்.  இதற்கு உரிய முடிவு எடுக்காவிட்டால் நாங்களே உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்தனர்.

இதனை தொடர்ந்து, சில நாட்கள் முன்பாக, சென்னை மாநகராட்சி, தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைகளை டிசம்பர் 14-ந் தேதி திறப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியது.

கிரிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள், திருநாட்கள் எல்லாம் வருவதால், மெரீனா மீண்டும் மக்கள் வருகையினால் பொலிவு பெறும் என எதிர்பார்க்கலாம். 

மெரினாவில் தினமும் நடைபயிற்சி செய்பவர்களும் நாளை முதல் அனுமதிக்கப்பட உள்ளனர். மெரினா கடற்கரை மீண்டும் வழக்கம் போல பரபரப்பாக மாறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ALSO READ |  Sleepy Hollow Village: நடுரோட்டில் மாதக்கணக்கில் தூங்கும் மர்ம நோயால் வாடும் மக்கள்..!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More