Home> Tamil Nadu
Advertisement

பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்: தமிழக ஆளுநர்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடிவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தார். 

பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர் தான் முடிவெடுக்க வேண்டும்: தமிழக ஆளுநர்

ராஜீவ் காந்தி ( Rajiv Gandhi) படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என பல காலமாக  தமிழகத்தை சேர்ந்த பல கட்சிகள் கோரி வருகின்றன.  இது குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம்  கொடுத்தது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு (Tamil Nadu Government) பரிந்துரைத்தது. இது குறித்த முடிவை தமிழக ஆளுநர் இன்னும் எடுக்கவில்லை

இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக் அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தார். மேலும், இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என ஆளுநர் தரப்பு கூறியுள்ளது.

முன்னதாக, பேரறிவாளனின் விடுதலை பற்றிய மாநில அரசின் 2018 பரிந்துரை குறித்து தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் (Banwarilal Purohit) மூன்று - நான்கு நாட்களில் முடிவு செய்வார் என்று உச்ச நீதிமன்றத்திடம் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன் ஆளுநர் இது குறித்து முடிவெடுக்கலாம் என கூறிய நிலையில், ஆளுநர் மீண்டும் குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உண்டு என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | பேரறிவாளன் விடுதலை: முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம்-SC

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More