Home> Tamil Nadu
Advertisement

பிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல் நலக்குறைவால் மரணம்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் (75) உடல் நலக்குறைவால் காலமானார்... 

பிரபல எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல் நலக்குறைவால் மரணம்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் (75) உடல் நலக்குறைவால் காலமானார்... 

பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தோப்பில் முகமது மீரான்(74) உடல்நல குறைவால் காலமானார். முகமது மீரான் உடல் நெல்லை வீரபாகுநகரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தோப்பில் முகமது மீரான் உடல் இன்று மாலை நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படுகிறது. 

கன்னியாகுமரி மாவாட்டம் தேய்ங்காய் பட்டினத்தில் 1944 ஆம் ஆண்டு பிறந்த இவர், ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சுவண்ணன் தெரு, குடியேற்றம் ஆகிய நாவல்களையும் அன்புக்கு முதுமை இல்லை, தங்கரசு, அனந்த சயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரைபடம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் ஆகிய சிறுகதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். 

மலையாளத்தில் இருந்து, தெய்வத்தின் கண்ணே, வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களை மொழிபெயர்த்துள்ளார். இவரது சாய்வு நாற்காலி என்ற நாவல், 1997 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. 

 

Read More