Home> Tamil Nadu
Advertisement

ஒகேனக்கல் நீர்விழுச்சிக்கு வரும் நீரின் அளவு குறைந்தது!

தருமபூரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்விழுச்சிக்கு வரும் நீரின் அளவு கனிசமாக குறைந்துள்ளது!

ஒகேனக்கல் நீர்விழுச்சிக்கு வரும் நீரின் அளவு குறைந்தது!

ஒகேனக்கல்: தருமபூரி மாவட்டம் ஒகேனக்கல் நீர்விழுச்சிக்கு வரும் நீரின் அளவு கனிசமாக குறைந்துள்ளது!

25 நாட்கள் கழித்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்துள்ளதாலும், இன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுவதாலும் நீச்விழுச்சியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் வேண்டுகோல் வைத்து வருகின்றனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த காரணத்தாலும், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியதாலும் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து 25 நாட்களாக அதிகரித்து வந்தது. இதனால் சுற்றுளா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் சுற்றுளா பயணிகள் நீர்விழுச்சியில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனலுக்கு வரும் நீரின் அளவு கனிசமாக குறைந்துள்ளது.

தண்ணீர் வரத்து குறைந்துள்ளதால் பரிசல் இயக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மலர்விழி அவர்களிடன் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இன்று ஆடிப்பெருக்கு என்பதால் ஒகேனக்கல் நீர்விழுச்சிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்!

Read More