Home> Tamil Nadu
Advertisement

திமுக தலைவர் ஸ்டாலின் - தெலுங்கானா முதல்வர் சந்திப்பு நிறைவு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சந்தித்து பேசினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் - தெலுங்கானா முதல்வர் சந்திப்பு நிறைவு

சென்னை: 2019 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டமாக நடைப்பெற்று வருகிறது. தற்போது வரையில் ஆறு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது. 7-ஆம் கட்ட தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறுகிறது. 

தேர்தல் முடிவுக்கு கிட்டத்தட்ட 10 நாட்கள் உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு பலத்த எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.

பாஜக மற்றும் காங்கிரஸ் தவிர்த்து மாநில கட்சிகள் ஒன்றாக இணைந்து மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் பணியில் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் ஈடுபட்டு வருகிறார். மக்களவைத் தேர்தலுக்கு முன்பே இதே முயற்சியில் கே.சந்திரசேகர் ராவ் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக பல அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சு வாரத்தை நடத்தினார். 

தற்போது மீண்டும் மூன்றாவது அணி திட்டத்தை கையில் எடுத்த கே.சந்திரசேகர் ராவ், கடந்த வாரம் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் தொலைபேசியில் பேசினார். அதனைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இந்தநிலையில், இன்று ஆழ்வார்ப்பேட்டையில் அமைத்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, அவரது இல்லத்தில் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார். 

தனது இல்லத்திற்கு வந்த கே.சந்திரசேகர் ராவை வரவேற்றார். அவருக்கு முன்னால் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த சிலையை வழங்கினார். பின்னர் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்றது.

Read More